FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on September 29, 2016, 11:06:10 PM

Title: *விவசாயின் மகன்*
Post by: இணையத்தமிழன் on September 29, 2016, 11:06:10 PM

இரண்டு கோடிகள் கொடுத்து
ஒரு ஜோடி நாய்கள் வாங்கும்
எங்கள் தேசத்தில்...!!
இருபது கோடிகள் கொடுத்து
ஒருவர் மட்டுமே பயணிக்க
கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!!
இருநூறு கோடிகள் கொடுத்து
கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்..!!
இரண்டாயிரம் கோடிகளை கடன் சுமையாய்
தள்ளுபடி செய்யும்
எங்கள் தேசத்தில்...!!
இருபதாயிரம் கோடிகளை
பொழுதுபோக்க ஒதுக்கும்
எங்கள் தேசத்தில்...!!
இரண்டு இலட்சம் கோடிகளுக்கு
அலைக்கற்றை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்...!!
எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும்
பொருளையோ ஏலமெடுக்கத்தான்
எவருமில்லை....!!

விளைவித்தவன்
பிச்சைக்காரன்...!!
விலை வைத்தவன்
இலட்சக்காரன்...!!
             
                       -யாரோ எழுதியது


Title: Re: *விவசாயின் மகன்*
Post by: ரித்திகா on September 30, 2016, 03:55:22 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1.glitter-graphics.org%2Fpub%2F291%2F291161ot2uqxn0q6.gif&hash=a8cb0aa765e6d6d57b1099916b8d807ff42adfaf)

~ !! அருமையான கவிதை அண்ணா .... !! ~
~ !! உண்மை கூட .... !! ~
~ !! பகிர்ந்ததற்கு மிக்க நன்றி அண்ணா ... !! ~

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmyfirstwebsite.tripod.com%2Fsitebuildercontent%2Fsitebuilderpictures%2Fheartroses4.gif&hash=1322274d7f80c4efb6e04e45df538f3067adb874)
~ !! ரித்திகா  !! ~
Title: Re: *விவசாயின் மகன்*
Post by: இணையத்தமிழன் on September 30, 2016, 06:12:34 PM
tnx ma rithi for reading and tnx for ur comment ma
Title: Re: *விவசாயின் மகன்*
Post by: LoLiTa on October 02, 2016, 04:37:29 PM
Realistic kavidhai! Inum naraya eluthunge bull na!
Title: Re: *விவசாயின் மகன்*
Post by: இணையத்தமிழன் on October 02, 2016, 08:10:36 PM
lolita ithu na eluthala ma ithu suta kavithai ma
 ;D
::) ::)