FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on September 24, 2016, 08:51:45 AM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FOqAnTmG.jpg&hash=b67b6c85150dbd47b55e963013a3c175b8e79b8b) (http://www.freeimagehosting.net/commercial-photography/)
எனது அன்புத் தங்கைக்கு ...
உன் புன்னகை கண்டிட ஆசை..!!
பொழுதனைத்தும்..
உன் குரல் கேட்டிட ஆசை !!
நீ துவண்டால்.. தோள் கொடுக்க ஆசை!!
உன் ஆசைகளை.. நிறைவேற்றிட ஆசை !!
உன் கஷ்டங்கள் கரைந்திட ஆசை !!
உன்வாழ்வு உயர்ந்திட ஆசை !!
உன் அருகில் நான் இருந்திட ஆசை!!
நீ அண்ணா என்று அழைக்கும் ஒலி
என்றும் என் காதில் ஒலித்திட ஆசை !!
இன்றுபோல் என்றும் நீ ஆனந்தமாய் வாழ்ந்திட ஆசை!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..!!
எனதுஅருமைத் தங்கை ரித்திகாவிற்கு!!
- இணைய தமிழன்
( மணிகண்டன் )
-
மிக்க மிக்க நன்றி
என் அண்ணா .....
உங்களின் பாசத்திற்கும் நேசத்திற்கும்
என்றுமே நான் அடிமை ......
இந்த நாள் மறக்க முடியாத விலைமதிப்பில்லா சந்தோஷமான தருணங்களை கொடுத்துள்ளது......
மிக்க மிக்க நன்றி அண்ணா
-
உன்னைப்போல் ஒரு தங்கை கிடைத்ததுக்கு நா தான் மா பெருமைப்படனும்
-
எழுத்துப் பிழை இல்லாமல் உங்கள் கவிதையை
வாசித்திட ஆசை
-
உன்வயதோர் பகட்டாய் உடையணிந்து
பல்சுவை பேசிக் கிடக்க
நீயோ பகலும் பாராமல்
இரவும் பாராமல் உழைத்தாய்
புல்லின் நுனிதனில் உள்ள பனித்துளி
சூரிய ஒளி பட்டுக் கரைவது போல
உன் உழைப்பில் உருவான
வியர்வைத்துளி பட்டு கண்ணோரம்
கரைந்தோடியது கண்மை
அதையும் பாராமல் பாடுபட்டாய்
இவ்வனைத்து சிரமத்தையும்
சிறு புன்னகையில் மறைத்தாய்
தங்கை இல்லையென்று ஏங்கித்
தவித்தவனுக்குத் தாயாய்
வந்து நின்றாய்
எனது அருமைத் தங்கையே
நீ பிறந்ததினம் இன்று
இன்றாவது ஓய்வெடு என்றேன்
இன்றும் ஓய்வற்றுழைக்கிறாய்
இந்த உழைப்பிற்கு ஒருவிடியல்
என்று வருமோ!
-இணைய தமிழன்
( மணிகண்டன் )
-
wow wow semma kavidhai!!!!!!
-
எழுத்துப் பிழை இல்லாமல் உங்கள் கவிதையை
வாசித்திட ஆசை
பிழை என்று மட்டும் கூறாமல் அப்பிழையை தாமே திருத்தி கொடுப்பதையும் கண்டிட ஆசை
-
Kavidhayum, Vazhthum, Anbum kalandhu Karaiya vaikiradhu kangalai.. Arumai machi.. Dragon Born.. (flowers)..
-
தம் பொன்னான நேரத்தில் இக்கவிதையை படித்தும் வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி மச்சி குரு இவ்வாழ்த்து அனைத்தும் எனது அருமை தங்கைக்கே சமர்ப்பணம்
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FyAgeC1D.jpg&hash=a1152cdfb530f41d47734af44ba5f1855374f967)