FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on February 03, 2012, 05:58:45 AM

Title: ஏனோ அவளுக்கு
Post by: ஸ்ருதி on February 03, 2012, 05:58:45 AM
எவளின் கண்களில்
என் கண்கள் சிக்கிக் கொண்டதோ

எவளின் அங்க அசைவுகளில்
நான் மூர்சையாகிறேனோ

எவள் வனப்பில்
என்வாலிபம் மண்டிஇட்டதோ

எவளின் திருமுகம்
என் இரவுகளை திருடிக்கொள்கிறதோ

எவளைக் கண்டால்
இதயத்தில்
எரிமலை வெடிக்கிறதோ

எவளின் திரு உதட்டில்
உயிரானது
ஒட்டி ஊசலாடுகிறதோ

எவளின் அருகாமை
ரத்தத்திலே
ரயிலோட வைக்கிறதோ

எவள் இறந்தால்
அண்ட சராசரங்கள் யாவும்
பொடியாகிப்போகிடும்
எனப்படுகிறதோ

அவளுக்கு
என்னைப்பற்றி ஏதும் புரிவதில்லை

அவள் விழிகளில் தொலைத்த
என் எதிர்காலம் போலவே..


பிடித்த கவிதை