FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on September 17, 2016, 11:51:42 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 118
Post by: MysteRy on September 17, 2016, 11:51:42 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 118
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Mirage ( Enigma ) அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F118.jpg&hash=d141a0f2e398ea6f957dd22bb6ece532d7aebccb)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 118
Post by: StasH on September 18, 2016, 03:50:28 AM
கம்மாளரும் கல் தச்சரும்
உருவாக்கிய கல்யாண மண்டபத்திலே,

ஒருபுறம் பந்திக்கு வருவோருக்கு ,
வெள்ளாலர் விளைவித்த அரிசியை
செட்டியார் கடையில் விலை வாங்கி
பண்டாரம் பரபரப்பாக சோறாக்க ;

மறுபுறம் தச்சர்  வடிவமைத்த  மணவறையில்,
வண்ணர் வெளுத்த பட்டு வேட்டி-சட்டை அணிந்து
சக்கிலியர் சிறுதையலிட்ட லாடங்கட்டி
முன்தினம் அம்பத்தார் சவரம் செய்த முகத்துடன்
மணமகன் அமர்ந்திருக்க ;

கைகொல்லர் கைநோட்டத்தில் உருவான
காஞ்சிபட்டு சேலை உடுத்தி,
தட்டர் சித்திரவேலைபாட்டில் சொலித்த
ஆரம், ஒட்டியாணம், நெற்றிச்சுட்டி பூணி
மணமகள் மிதந்து வர ;

நட்டுவரின் நாதஸ்வர மேள-தாளம் காதை பிளக்க
கொல்லரின் குத்துவிளக்கில் சோதியேற்ற
பிராமணர் மந்திரம் ஓத
ஆசாரியார் செய்துதந்த தாலியை
அம்பலகாரர் தன்கையால் எடுத்து தர ;

அதை கட்டுவதற்கு மட்டும்
“[highlight-text]உங்கள் சாதி[/highlight-text]"
பெண்ணின்
கழுத்து தேவைப்படுகிறதா ??

மேற்கூறிய அனைத்து தொழில்களும்
“உங்கள்” சாதியர்
செய்யும் நாள்  வரும்பொருட்டு
சொல்லி அனுப்புங்கள் – நீங்கள்
சொன்னபடி செய்கிறேன்

அந்நாள்  வரையிலும்,
என் மனதிற்கு பிடித்தவளுடன்
ஈரேழு பதினான்கு சென்மங்கள்
வாழ்ந்து கொள்கிறேன் ![/font][/size][/color][/b]
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 118
Post by: DaffoDillieS on September 18, 2016, 09:54:23 AM
என்று தான் புரியும் நம்மவர்க்கு..?!
திருமணம்..
இருமனங்கள் இணையும் பந்தமென்று..!
சாதிகள் இல்லையடி பாப்பா !!..
என பாரதி பாடியது..
வெறும் ஏட்டுச் சுரைக்காயாகித்தான் போனதோ..?!

பத்துப் பொருத்தம் பார்த்து..
சொத்து சுகங்கள் பார்த்து..
நாள் நட்சத்திரம் பார்த்து..
உறவினர்களுக்காகப் பகட்டு பார்த்து..
திருமணம் செய்வது..
பத்துக் காதல் திருமணங்களுக்கீடாகுமா?!..
எனக் கேட்போருக்கு..
திருமணம் கௌரவத்திற்கல்ல!!....
எனப் புரிவது கடினந்தான்!

காதலுக்குக் கண்ணில்லை..!
நம்மவர்க்கு  மனதேயில்லை..!
தோலின் நிறம் பார்ப்போர்..
மனதைத்தேடுவதேயில்லை..!
வெள்ளைக்காரனைப் பார்த்து..
எத்தனையோ கற்றுக்கொண்டோர்..
அன்பிற்குத் தகுதியோ..நிறமோ..தேவையில்லை..!
எனப் புரிந்து கொள்வதெப்போது..!?

யாரோ எவரோ..
உரைத்ததை வேதம் என நம்புவோர்..!!
தம் சொந்த மக்களை..
நம்ப மறுப்பதேன்?!

பங்குச்சந்தையிலும்(?!) மோசமான..
திருமணச்சந்தையிலே..!!
வியாபாரம் செய்யக் காத்திருப்போருக்கு..
அன்பின் அருமை..
எத்துனை அம்பிகாபதி-அமராவதிக்கள் இறந்தாலும்..
புரியாமல் போனது...
புரியாப் புதிர் தான்!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 118
Post by: Dong லீ on September 18, 2016, 12:53:53 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FQS9TE9r.jpg&hash=be44629850302da8072940d89eb3f901273ce745)

பின்குறிப்பு
இருவரும் கவிதை எழுத தெரியாத மணமகன்கள்
கவிதையில் பிழைகளை மன்னிக்கவும்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 118
Post by: AnoTH on September 18, 2016, 12:55:00 PM
இந்தியா என்னைப்போன்ற பெண்களின் புனித பூமி
தமிழ் நான் வணங்கும் முதன்மை மொழி
பண்பாடு நான் பேணிக்காக்கும் என் புனிதம்
அன்னையே! என் பெண்மைக்கு புனிதம் சேர்க்கபோகும்
அந்த நாள் நாளை ஒருவனுடன் அமையப்போகிறது.
 
சொந்த பந்தங்கள் சூழ இன்னிசை சப்தங்கள் கேட்க
மனதின் அழுகுரல் மட்டும் என்னுள் இருக்க,
சாதி எனும் கைவிலங்கில் நான் சிறையுண்டு
ஒரு பொருளாக பணம் ஆதிக்கம்  செலுத்தும்,
ஆண் அவனுடன் ஒரு பொம்மையாக
இனி நாட்கள் தொடரும்.

பல தேசங்களில் அன்பு மட்டும் ஆதிக்கம் செலுத்துமாம்.
சாதிகள், பேதங்கள் அற்ற ஒரு சமூகத்தில் வாழ
என் மனம் துடிக்கிறது.

திருமணம் இரு மனங்களின் கூட்டணி இல்லையேல்
ஆதிக்கம் நிறைந்த வாழ்வில் என்னைப்போன்ற
பெண்கள் என்றும் மனதளவில் மௌன விரதமே!

சிந்திப்பதற்கு நேரம் கொடுங்கள்
 தவிர்க்க வேண்டியவற்றை தவிர்த்து
இரு மனங்களை இணைத்திடுங்கள்
திருமணம் கூட அன்னை மடி ஆகிவிடும்.

                                                                                                - அனோத்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 118
Post by: ரித்திகா on September 18, 2016, 03:48:04 PM
இரு மனம் இணைந்து ...
இரு குணம் உணர்ந்து ...
இரு விட்டார் ஒன்று கூடி
அம்மி  மிதித்து அருந்ததி பார்த்து
மேளம் கொட்டித் தாலி கட்ட
கரமோடு கரம் கோர்த்து
அக்கினியைச் சுற்றி வர
மணமக்கள் அகத்திலும் முகத்திலும்
தேஜஸ் ஒளிர....
ஏழேழு ஜென்ம தொடர் பந்தமென
நடந்தேறுவதே திருமணம் ....

என்ன ஒரு அழகான கற்பனை ...
ஆம் ..கற்பனையே ...இதுவெறும் கனவே ....
சாதி பணம் நிறம் கெளரவம்  பொருத்தம்
நட்சத்திரம் என
இவைகளை மட்டுமே பார்த்து
காலம் முழுவதும் ஒன்றிணைந்து
வாழப்  போகும் இரு மனங்களைப்
பற்றி துறம்பலவும்  கவலையின்றி
தமது குறிக்கோளை மட்டும் நிறைவேற்றி
சுயநலத்துடனும்  நிற்கும்
மனிதர்களிடையே திருமணம் என்பது
வேறு மணம்.....

சாதி சாதி சாதியென
சாதியைப் பார்த்தே வாழ்விரானால் ....
நீர்  மரணித்த பின்பு 
உம்மை சுமக்க நாதில்லை ....
இடுகாட்டில் உம் சடலத்தில்
புதைக்க இடமுமில்லை ....
பத்து பொருத்தங்களை மட்டும் பார்த்து
நடந்தேறிய திருமணம் ....
விவகாரத்தில் முடிந்து இன்று
மனமோ நாடுகிறது மறுமணம் ....

பூமாதேவியின் சுவரூபமானால் பெண் ....
சந்தையில் பேரம் பேசுவதுபோல்
அப்பாவையே வேடிக்கைப் பொருளென
நிற்க வைத்து பேரம் பேசுவதுஏனோ....
பணம் கொடுத்தால் வருபவள்
விலைமாது ....
வரதட்சணை எனும் பேரில்
உம் குலவதுவிடம் கொள்ளையடித்து
வாழ்க்கையைச் சீர்செய்ய
நினைக்கும் நீர் யாது என்பதினை
யாம் அறியலாமா .....?????

கோவிலேனும் இல்லத்தில்
விளக்கேற்ற வருபவள் குணத்தைத்
தெரிந்து கொள்ளவில்லை ....
தோலின் நிறத்தையும் அழகையும் 
பார்த்தீர்கள் ....
இன்று உம் வீட்டில் நடக்கும்
போரை ஊரே ஒன்றுக்கூடி
கைகொட்டிச் சிரித்து ரசித்து
வேடிக்கைப்  பார்க்கிறார்கள் ....
கெளரவம் உம் கெளரவம்
இன்று  காற்றில் பட்டாம்பூச்சிபோல்
சிறகு முளைத்து வானில் பறக்கின்றது ....

திருமணம் வாழ்வில்
ஒருமுறை வரும் வைபோகம் ...
இன்னாருக்கு இன்னாரென
இறைவனால் முடிச்சியிட்டு
இரு உள்ளங்கள் இணைந்து
காதலெனும் பேரலையில் மூழ்கி
மூன்று முடிச்சியிட்டு
சந்தோஷ அலைக்கடலில்
நிகழவேண்டிய திருமணம் ....

உண்மையான அன்பினால்
ஒன்றிணைந்து
இரு கரங்களும் கோர்த்து
பெரியோரின் ஆசி பெற்று
ஏழேழு ஜென்ம பந்தம் தொடங்கட்டும் ....
தாலி எனும் மங்கல கயிற்று
தூக்கு கயிற்றன மாற்றலாகாமல் இருக்கட்டும் ....

நன்றி .......
~ !!.... ரித்திகா ....!! ~
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 118
Post by: இணையத்தமிழன் on September 18, 2016, 04:17:33 PM

கண்கள் பேசிடக் காதல் வளர்த்தான் !
நீ இல்லையேல் .. உயிர்நீப்பேன் என்றான் !
வாழ்நாள் முழுக்க வேண்டும் என்றான் !
காதல் வளர்ந்திடக் கரங்களைப் பிடித்தான்!
ஒருவருடத்தில்  மோகம் தீர்ந்திட ..
பிரிந்து சென்றனர் அவளும் அவனும் !
மீண்டும் உண்மையாய் காதலித்தனர் வேறு ஒருவரை !
இதையே வெளிநாட்டில் காதல் என்றார் ..!

இங்கோ  பார்த்துப் பழகியது இல்லை !
பார்க் பீச் என்று சுற்றித்திரியவில்லை !
இரவும் பகலும் கைபேசியில் ..
முத்தம் பரிமாறவில்லை !
தாய் தந்தையின் ஆசைக்காக  ..
ஒன்றுசேர்ந்தோம்!
கடைசிவரை  கைப்பிடித்தான் ..
கண்கலங்கிட ..அவனே கலங்கினான் !
திருமணத்திற்கு முன்வருவது தான் ..
காதல் என்று நினைத்தேன் !
திருமணத்திற்குப் பிறகும் காதல்
வரும் என்று நிரூபித்தான்!
இங்கோ மதம் சாதி என்று
வேறுபாடு உண்டு என்பர் ..

எங்கு இல்லை வேறுபாடு !
உலகைக் கண்டேன்
நிறத்தில் வேறுபாடு !
மதத்தில் வேறுபாடு !
கண்டத்தில் வேறுபாடு !
கண்டத்தைக் கண்டேன்..
மதத்தில் வேறுபாடு!
நாட்டில் கண்டேன்..
மொழியில் வேறுபாடு !
எதில் இல்லை வேறுபாடு !
இத்தனை வேறுபாடு கண்டினும் ..
கட்டிய கணவனுக்காக..
மதுரையை எரித்தாள் கண்ணகி !
கட்டிய கணவனுக்காக ..
ஆதவனுக்கே ஆணை இட்டாள் நளாயினி !
வேறுபாடுகள் இல்லாத காதல் ..
எங்கே உண்டு !!
அயல்நாட்டைக் காட்டிலும்  என்னாட்டிலே ..
காதலும் மனமும் உயர்ந்தது !!!
Title: காதல் திருமணம்
Post by: BlazinG BeautY on September 18, 2016, 04:22:38 PM
காதல் மனதில் தோன்றி திருமணத்தில் முடியும் என்பர்..
எனக்கும் ஆசைதான் ..
அப்படி ஒரு திருமணம் வேண்டும் என்று..

எனக்காக ஒருத்தர்  வந்தார்  என் வாழ்வில்..
இருவரும் சந்தித்தோம் அயல் நாட்டில்...
நிறம், ஜாதி  தெரிய வில்லை எனக்கு...
இரு மனம் சேர்ந்தது...
இன்பமானது என் வாழ்வில்..

பெற்றோரிடம்  கூற எண்ணி ..
விருப்பத்தை சொன்னோம்...
சம்மதித்தது போல் பேசி..
எங்கள் இருவரையும் வர செய்து ..
எங்களுக்கே தெரியாமல்..
மறுபுறம் சதி செய்தனர்...
பாத்து பொருத்தம் இல்லை .
என்ன ஜாதியோ..
நம்  நிலை என்ன அவர்கள்  நிலை என்ன  ..

பிரித்தனர்  எங்கள் இருவரையும் ,
அழுது புரண்டும், சண்டை போட்டும்
பலன் இல்லாமல் போனது...
உயிர் உள்ள மனதை பார்க்காமல்,
உணர்வற்ற  பொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்து
என் வாழ்வில் விளையாடினீர் ...

நிறம், ஜாதி, பணம்...
ஏன்  இங்கே  பிறந்தீர் ?
என்  நாட்டில் ...
நீங்கள் ஏன் நிர்ணயிக்கிறீர்?
எங்கள் திருமணத்தை
எங்களை  பிரித்து போதும்..
இனியும் பிரிக்காதீர்..


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 118
Post by: ReeNa on September 18, 2016, 05:06:22 PM
பிறப்புக்கு பிரம்ம தட்சணை
கல்விக்கு குரு தட்சணை
மணவாளனுக்கு வரதட்சணை
இருமனம் இணையும் திருமணத்திற்கு
மணவாட்டியே மணாளனுக்கு தட்சணை

இரு மனங்கள் இணையும்
ஒரு பரிமாணம்  திருமணம்
இதற்கு யாகம் வளர்க்கும்
அக்னி சாட்சி தேவை இல்லை
இருவர் மனம் இணையும்
அன்பின் சாட்சியே தேவை...

இங்கே திருமண பொருத்தம் பார்த்து ,
ஜாதக பொருத்தம்,அந்தஸ்து பார்த்து
ஜாதி பொருத்தம் பார்த்து 
இதயத்தின் பொருத்தம் பார்க்கவில்லை

பெண்ணின் நடை,உடை,நிறம் 
உன்னை திரும்ப வைக்கும்
உன்னை கவரும் பெண்ணின் குணமோ
கடைசிவரை விரும்ப வைக்கும்

பெண்ணின் குணத்தை தேடு
அவளிடம் பணத்தை தேடாதே
அவள் உன் வருங்கால சந்ததியின்
தலைமகள் என்பதை உணர்ந்திடு

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 118
Post by: சக்திராகவா on September 18, 2016, 05:47:26 PM
மேனி நிறம் பார்த்து
மெருகேறும் நகை சேர்த்து!
மெல்ல வரசொல்லி
மேலோட்ட பார்வையில்

பெண் பார்க்கும் படலம்!
பெண் இங்கே சடலம்!
 
மேலாளர் வேலை
மேல்தட்டு வாழ்க்கை
சொந்தமாய் வீடு
சொர்கமாய் புகுவிடம்

ஆண் மணமாகும் நேரம்
அவன் ஆயுளே போகும்!

இந்திய நிலையிது - சில
காதலால் கலையுது!
சாதிகளில் சிக்காமல்!
தகுதி பார்க்காத
தரமான வாழ்க்கை!

மேலைநாட்டினிலோ
வேலை தேவையில்லை
வேறு சாதியா கேட்பதில்லை
மனமொத்தால் திருமணம்
மனமுறிவு மறுமணம்!

இங்கும் அங்கும் இயல்புதான்
நல்லதும் கெட்டதும்!
கலந்து காதல் செய்
கடைசிவரை காதல் செய்!

சக்தி ராகவா