FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on September 14, 2016, 08:44:03 PM
-
போர்க் அண்ட் எக்ஸ்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2FFOOD%2F14237605_1615890308708438_4917223034283502017_n.jpg&hash=dd7e0533978c91c3c4e36529874c044ba591b45a)
தேவைப்படும் பொருட்கள் :
1. பன்றி இறைச்சி – 1 கிலோ
2. உப்பு – 1 தேக்கரண்டி
3. ஷெர்ரி – 2 மேஜைக் கரண்டி
4. ஸோயா ஸாஸ் – 4 மேஜைக் கரண்டி
5. சின்ன வெங்காயம் – 6
6. முட்டை – 6
7. தண்ணீர் – 1/2 லிட்டர்
முன்னேற்பாடு – 1
1. இறைச்சியை நன்றாகக் கழுவிக் கொள்ளவும்
2. ஒரு அங்குலம் உள்ள துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
3. ஒரு பிரஷர் குக்கரில் அரை லிட்டர் தண்ணீரை ஊற்றவும்
4. அதில் போர்க்கைப் போடவும்
5. வேக வைக்கவும்
முன்னேற்பாடு – 2
1. முட்டைகளை தண்ணீரில் போடவும்
2. பாத்திரத்தை அடுப்பில் ஏற்றவும்
3. வேக வைக்கவும்
4. வெந்தவுடன் எடுத்து மேல் ஓட்டினை நீக்கிக் கொள்ளவும்
5. பின், இதை நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும்
முன்னேற்பாடு – 3
1. வெங்காயத்தைக் கழுவவும்
2. தோல் நீக்கவும்
3. சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
தயாரிப்பு முறை :
1. வேக வைக்கப்பட்ட இறைச்சியுடன் உப்பைச் சேர்க்கவும்.
2. அதில் ஷெர்ரி, ஸோயா ஸாஸ் போன்றவற்றைச் சேர்க்கவும்.
3. இதை அடுப்பில் ஏற்றவும்
4. அனலை மந்தமாக வைத்து மீண்டும் வேகவிடவும்
5. இவ்வாறு அரைமணி நேரம் வேகட்டும்
6. பின்னர் நீள வாக்கில் வெட்டி வைக்கப்பட்டுள்ள முட்டைகளை எடுத்து இறைச்சியில் சேர்க்கவும்.
7. இதில் வெட்டப்பட்டுள்ள வெங்காயத்தைச் சேர்க்கவும்
8. தொடர்ந்து பத்து நிமிடங்கள் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
9. பின்னர் அடுப்பிலிருந்து இதை இறக்கி வைத்துப் பரிமாறலாம்.