வணக்கம் கடந்த சில பல நாட்களாக காவிரி தண்ணீரின் உரிமைக்காக நம்ம தமிழக விவசாயிகள் போராடிக்கிட்டு இருக்குறாங்க .. பக்கத்து மாநிலம் கருநாடகம் தண்ணீர் கொடுக்க மாட்டோம் னு போராடிகிட்டு இருக்குறாங்க..கண்டிப்பா இது செய்தித்தாள் வாயிலாக எல்லோருக்கும் தெரிஞ்சு இருக்கும். இந்த போராட்டத்தை கவனிச்சு பார்த்தா ஒரு உண்மை தெரியும் பக்கத்து மாநில மக்கள் அவங்க உரிமைக்காக ஒன்றாய் கூடி போராடுனாங்க..சாதி மதம் ஏற்றத்தாழ்வு னு இல்லாம எல்லாம் ஒன்றாய் இணைஞ்சு மாநிலமே திரண்டு போராடுனாங்க... ஆனால் நம்ம தமிழ்நாட்ல நிலைமை வேற..இங்க விவசாயிங்க மட்டும் போராடிகிட்டு இருக்குறாங்க ..நெறய பேரு இந்த வாழ்வாதார பிரச்சனையை பத்தி கண்டுக்காம போறத கண்கூடா பாக்கமுடியுது..தமிழருக்குள்ள ஒற்றுமை இல்லையேன்னு ஒரு வருத்தத்துல வந்ததுதான் " காய்ந்து போவது காவிரி ஆறு மட்டுமல்ல" என்ற என்னோட இந்த கவிதை..
காதலிக்காக ஆயிரம்
கவிதைகள் எழுதுபவர்
எல்லாம் ஏனோ - வறண்ட
காவிரிக்காக ஒன்றும்
எழுதவில்லையே !
"காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்.”
பாரதி சொன்னான்...- இன்று
காவிரி வெற்றிடமாய் மாறி விட்டதே !..
"வண்ணம் பாடியே நடக்கும் காவிரி"
பாரதிதாசன் சொன்னான் - இன்று
வளமின்றி காவிரி
வறுமையுடலுடன் படுத்துவிட்டதே !!.....
கருகும் பயிருக்காய்
கண்ணீர் வடிக்கும் விவசாயினை
கண்டுணர மனமில்லை.....
கபாலி பட நான்கு காட்சிகளை
கண்டு அலைகிறானே தமிழன் !...
காய்ந்து போன நிலத்தை எண்ணியெண்ணி
ஓய்ந்து போகிறான் நம் விவசாயி - நடிக
கட் அவுட்டுக்கு பாலூற்ற கூடும் கூட்டம் கூட
கடைமடை விவசாயிக்கு வருவதில்லையே.....
வேற்றுமொழி பேசும் மாநில ஒற்றுமை - அமுது
ஊற்றாய் இனிக்கும் தமிழ் பேசும்
நம் தமிழனிடம் இல்லையே !...
திராவிடம் பேசி மெல்ல பிரிப்பதும்
தமிழக அரசியலின் ஒரு தொல்லையே !!
அறவழியோ ஆக்ரோசமோ போராட்டமெனில்
அரசியல்வாதியும் அடித்தட்டு மக்களும்
ஒன்றாய் சேர்வது அண்டை மாநிலம் !......
சாதியிலும் மதத்தாலும் கட்சியாலும்
அடித்து கொண்டு பிரிந்து போவது
நம் அழகு தமிழ்மாநிலம் !!.....
எத்தனை கோடி தமிழ் மக்கள்
எங்கெங்கோ இருந்தென்ன பயன்? -
ஒற்றுமை இன்றி
ஈழத்தின் நிலத்தை விட்டோம் -கச்சத்தீவை
கயவருக்கு கொடுத்தோம் அன்று !.....
காவிரி, முல்லை , பாலாறு கூட
கரம்நழுவி செல்லும் நிலையில் இன்று !! ...
சரித்திரத்தில் பெற்ற பெருமை - தமிழ்
சந்ததி வாழும் வரை தழைக்க வேண்டும்....
இதற்கு நல்லொற்றுமை தமிழருக்குள்
நிலைக்கவேண்டும் - இல்லையெனில்
வற்றிகாய்ந்து போவது காவிரிஆறுகள் மட்டுமல்ல
தமிழினத்தின் வளர்ச்சி பெருமையும்தான்.....
- கபிலன் FTC
https://www.youtube.com/v/bl3F7jNdH8I
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.lenniesflowershop.com%2Fros099.gif&hash=635adba17a0e14e537050ecb1ea3c4ef7bb6e5e3)
அருமையான அவசியமான
கவிதை தோழா....!!!!
உண்மையை உணர்த்தியுள்ளீர் தோழா ....!!!
''காதலிக்காக ஆயிரம்
கவிதைகள் எழுதுபவர்
எல்லாம் ஏனோ - வறண்ட
காவிரிக்காக ஒன்றும்
எழுதவில்லையே ! ''
இக்கூற்றை நான் ஏற்கிறேன் தோழா....
காதல் கவிதை எழுத தெரிந்த எமக்கு
வறண்டு போகும் காவிரியைப் பற்றி
எழுத தோன்றவில்லை எண்ணமும் வரவில்லை ...!!!
வருந்துகிறேன் தோழா....
தோழரின் காணொளி மூலம்
இக்கவிதை உலகெங்கும் பரவவேண்டும் ....
ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டும் ...
தவற்றை உணர வேண்டும் ...
திருந்த வேண்டுமென்று ஆசைக் கொள்கிறேன் ....
மிக்க நன்றி கபி....
கவிஞனின் கவிதை பயணம்
முற்றுப்புள்ளியின்றி தொடரட்டும் .....
வாழ்த்துக்கள் தோழா .....!!!!
நான் தங்கள் கவிதையின்
ரசிகை .....
~ !!... ரித்திகா ...!! ~
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fbestanimations.com%2FHolidays%2FEaster%2Fbunny-rose-glitter-animated-gif.gif&hash=b866ed66c85a715a8f95088d96756ec949be23f2)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2FGENERAL%2FRachana%2BMalhotra%2Bclose%2Bup%2Bpics%2Bof%2Bhalf%2Bsaree%2Bcollections.jpg&hash=37aa0054d647b408b83be0fbeea145f62e27f42d)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FA6Sc212.jpg%3F1&hash=a0547adb1c0bae4e00254a3e1c0ec6bc3028fd22)