FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on September 10, 2016, 07:41:37 PM

Title: இல்லாமை
Post by: இணையத்தமிழன் on September 10, 2016, 07:41:37 PM

உன்ன உணவு இல்லை
உடுத்த உடை இல்லை
இருக்க இடம் இல்லை
கல்வியில் தரம் இல்லை
படித்தால் வேலை இல்லை
உழைத்தால் உயர்வு இல்லை
தமிழ் பேச ஆள் இல்லை
தமிழனுக்கு  நீதி இல்லை
காதலில் உண்மை இல்லை
ஆனால்

நடித்தால் நாடு உண்டு
பணம் இருந்தால் புகழ் உண்டு
ஏமாற்றுபவனுக்கு உயர்வுண்டு
ஆங்கிலம் பேச்சிற்கு பெருமையுண்டு
பொய் பேசின் வாழ்வுண்டு

இவை அனைத்தும் உண்டு
என் தாய்த்திரு நாட்டில்

                                 -இணைய தமிழன்
                                 (மணிகண்டன்)
Title: Re: இல்லாமை
Post by: LoLiTa on September 10, 2016, 09:01:41 PM
Realistic kavidhai.. super na
Title: Re: இல்லாமை
Post by: இணையத்தமிழன் on September 10, 2016, 09:19:45 PM
thanks alot ma lolita and tnx for reading ma  :)