FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on September 09, 2016, 07:55:08 PM

Title: பரிணாம குரங்குதேடும் இன்ப சுற்றுலா
Post by: Maran on September 09, 2016, 07:55:08 PM


ஓவியம் உயிராகிறது இழையில் FTC Team சார்பாக மிக அழகான நிழற்படம் ஒன்று பதிவிட்டு இருந்தது, இயற்கையில் ஒன்றி வாழ வேண்டிய நாம்.. மறுதலித்து, அதை ரசிக்க தேடியலைவது போல்... இயற்கை வாழ்வியல் என்பது, கிராமங்களில் வாழ்வது இல்லை. உடலின் இயற்கையோடு இணைந்து வாழ்கிறோமா என்பதுதான் முக்கியம்.

நம் முன்னோர் நமக்கு அளித்த இயற்கை செல்வங்களை, நாம் நம் அடுத்த சந்ததியினருக்கு அளிக்க வேண்டியது நம் கடமை அல்லவா?

வாழ்க்கையை அதிசிக்கலாக்கி கொண்ட உயிரினம் மனிதன் மட்டுமே இந்த உலகில்...


அண்டத்தை படைத்து
பிண்டத்தையும் படைத்த
இயற்கை அரும்பொருளே - உன்னை
வாழவிடாமல் வாதிக்கும் மாக்களிடம்
போர் தொடுக்காவிடில் நியாயமோ?


தெரிந்தே செய்யும் தவறுகளின் எண்ணிக்கை கூடும் போது, தெரியாமல் செய்யும் தவறுக்கு தண்டனை கடுமையாக இருக்கும் என்பதே இயற்கை நியதி!!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FPoem%2F2_zpsfrnahta5.png&hash=9bc52948e4a6c822a121fc2b1787b9d3856702e8)
Title: Re: பரிணாம குரங்குதேடும் இன்ப சுற்றுலா
Post by: ரித்திகா on September 10, 2016, 12:42:12 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi717.photobucket.com%2Falbums%2Fww180%2FBillie98_2009%2FHugs%2FButterfliesFlowersScrollsGoldBar.gif&hash=889ef878d53d6e5bf3fe9bdeb8d13b18d1b32bd9)

அருமையான கவிதை தோழரே ....
 வாழ்த்துக்கள் .....
உண்மையை உரைத்துள்ளீர் மாறன் ....

''தெரிந்தே செய்யும் தவறுகளின் எண்ணிக்கை கூடும் போது,
தெரியாமல் செய்யும் தவறுக்கு தண்டனை
கடுமையாக இருக்கும் என்பதே இயற்கை நியதி!!''

இயற்கையை நேசிப்போம்
அடுத்த சந்ததியினருக்கு நேசிக்க
வழியமைப்போம் ....!!!!

மிக்க நன்றி மாறன் ...

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fbella01.ru%2Fspacers%2Frotate.php&hash=07ecfe38033a2f1d3fc0d7ebdbd4d04bb6fb41d8)
Title: Re: பரிணாம குரங்குதேடும் இன்ப சுற்றுலா
Post by: aasaiajiith on September 10, 2016, 01:40:07 PM
பிச்சை எடுத்தும் கடவுள் , ஆண்டவர், இறைவன்  எல்லோரையும் வளர்க்கும் ...

மிரட்டுகிறது கருத்து !!

ரசித்தேன் ருசித்தேன் 
உன் வரிகள் ருசி   தேன் ...
Title: Re: பரிணாம குரங்குதேடும் இன்ப சுற்றுலா
Post by: LoLiTa on September 11, 2016, 12:55:20 AM
Maran avargale, arumayane kavidhai.
Title: Re: பரிணாம குரங்குதேடும் இன்ப சுற்றுலா
Post by: Maran on September 11, 2016, 06:33:59 AM



நன்றி நண்பா ஆசை அஜீத்  :) நன்றிகள் தோழி ரித்திகா, LoLiTa  :)  :)


கவிதைதான் எழுதுகிறேன் என்று எண்ணி நான் கிறுக்கிய கிறுக்களையும் ரசித்துப் பாராட்டியத்திற்கு...  :)