"என்னவளை தேடி"
மயங்கி இருந்தேன் அந்த தேனிசை கேட்டு,
வண்ணம் பெற்றது இங்கு தென்றல் காற்று,
அமுதென இனித்தது அந்த தேன்தமிழ் சொற்கள்,
என் இதயத்தில் மலர்ந்தது பலவண்ண பூக்கள்.
வெற்றிடம் ஒன்றிங்கு நிறைய கண்டேன்,
என் உயிரில் ஒரு பாதி கரைய கண்டேன்,
இசையின் புது வடிவம் கண்டதாலே,
அதன்மேல் கண்மூடித்தனமாக காதல் கொண்டேன்.
இசைக்கருவிதான் என்ன என்று தேடிப்போனேன்,
இந்த தேனிசையின் பிறப்பிடம் காணப்போனேன்,
வியந்து நின்றேன் உண்மைதனை அறிந்தபோது,
கலங்கி நின்றேன் அவள் குரலென்று தெரிந்தபோது.
தமிழ் தன்னை பேசி பேசி வசீகரித்தாள்,
ஓவியங்களுக்கு அவளிங்கே உயிர் கொடுத்தாள்,
வரிகளின் இனிமைதனை சாறெடுத்தாள்,
அதை கவனிப்போர் செவிப்பக்கம் தூவிவிட்டாள்,
குயிலோசை குரல் கேட்டு மகிழ்ந்து போக,
தமிழோசை சுவை கண்டு நெகிழ்ந்து போக,
சனிதோறும் நான் வருவேன் வாழ்த்துகள் சொல்ல,
ஓவியங்களுக்கு உயிர் கொடுக்கும் என் ஓவியம் தேடி.
உன் நண்பர்கள் பட்டியலில் எனக்கோர் இடம் தேடி,
நான் கோர்த்த வரிகள் இது என் அன்புத்தோழி,
உன் மனதில் நான் தேடிய இடம் தன்னை,
நான் பிடித்துவிட்ட கதை சொல் என் அன்புத்தோழி.
-குரு-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.skyrock.net%2F4942%2F59634942%2Fpics%2F3199958061_1_4_ca7cCa9D.png&hash=6934951ef0d25db39807a59c25251023bc241869)
~ !!... Guru Hi ...!! ~
~ !!... unga kavithai ...!! ~
~ !!... Arputham...Romba romba Azhaga Eluthi Irukinga ...!! ~
~ !!... aahaa Enna Rhymingu ...Enna Timingu ...Enna Liningu ... Enna Feelingu ...!! ~
~ !!... Padiche udane Feelaiyi Meltaiyi apdiye Mersalaiten ba ....!! ~
~ !!.. Muthal kavithaileye Elarudaiye Manasuleyum Chair pottu Utkanthuthinga ...!! ~
~ !!... Neenga romba Paasa kaara Paya pullanu teriyum ...!! ~
~ !!... Aana ipdi Kavithaiyin vazhi Paasa Mazhaiyele Nanaiye
veipinganu Ethirpaarkale ...!! ~
~ !!... N antha Paasa Mazhiyil Naanum Nanainthen ...!!! ~
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg100.ph.126.net%2FrO6vFPuvIIFlxOa89BlFSA%3D%3D%2F2049419305431736159.gif&hash=37b3784d4de5f97e270fa8219506afd28ce84af9)
~ !!...Paarthen ..!! ~
~ !!... Padithen ...!! ~
~ !!...Rasithen ...!! ~
~ !!...Rusithen ...!! ~
~ !!... Unarthen ...!! ~
~ !!... Rasigaiyum aanen ...!! ~
~ !!... Guruvin Kavithai Payanam ...!! ~
~ !!... Melum Melum Thodara Enathu Manamaarntha Vazhthukal ...!! ~
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.clker.com%2Fcliparts%2FJ%2FL%2Fz%2FO%2FG%2FM%2Fhibiscus-flowers-4-grouped-md.png&hash=1b43fc2b84c8c5f00842d01e496fe5550b0dba72)
~ !!... RiThikA ...!! ~