FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on September 07, 2016, 03:05:25 PM

Title: "நானா" " மலர் "
Post by: aasaiajiith on September 07, 2016, 03:05:25 PM
இனிமையென்றதுவும்
மென் பூவிதழ்தம்
இழையதனை ஒத்த
மிக மெல்லிய குரலென்றே
இட்டுக்கட்டி வைக்கப்பட்டிருந்த
கட்டுக்கட்டான கட்டுக்கதைகள் தனை
வெட்டி வீசிவிட்டது
"நானா" " மலர் " எனும்
மனம்மயக்கும்
நின் மந்திரக்குரல் ....