FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on September 04, 2016, 11:44:55 PM
-
செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2Fimages%2FMysteRy%2520-%2520Forum%2F14141937_1612879455676190_3704474019135246481_n.jpg&hash=db58d8312c78655ebe27cecb1253aed9c68aba6d)
சிக்கன்………………1/2 கிலோ
சின்ன வெங்காயம்…15
இஞ்சி………………………1/2 இன்ச் நீளம்
பூண்டு……………………..8
முந்திரி…………………….8
மிளகாய் பொடி….1/2 தேக்கரண்டி
மல்லி பொடி………1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி………..கொஞ்சம்
மிளகு………………….1/2 தேக்கரண்டி
சீரகம்……………………1/2 தேக்கரண்டி
சோம்பு…………………..1/4 தேக்கரண்டி
கசகசா…………………….1/4 தேக்கரண்டி
பட்டை…………………..சிறு துண்டு
கிராம்பு…………………..4
ஏலக்காய்………………2
ஜாதிக்காய்…………….கொஞ்சம்
புதினா, மல்லி……….கொஞ்சம்
வெண்ணெய்/நெய் /எண்ணெய்…4தேக்கரண்டி
எலுமிச்சை……………..1/2 மூடி
தயிர்…………………………1.தேக்கரண்டி
உப்பு…………………………..தேவையான அளவு
பால்…………………………..2 தேக்கரண்டி
சோயா சாஸ் ,இருந்தால்…..2 தேக்கரண்டி
செய்முறை:
சிக்கனை நன்கு கழுவி நீரின்றி பிழிந்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். இஞ்சி பூண்டை அரைக்கவும். முந்திரி,மிளகு, சீரகம், சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு, ஜாதிக்காய்,புதினா+ மல்லிதழை இவற்றை நன்கு அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சிக்கனைப் போட்டு, அதில் அரைத்த இஞ்சி, பூண்டு, மிளகு சீரகம் விழுது, மிளகாய் பொடி, மல்லி பொடி, மஞ்சள் பொடி, தயிர், வெண்ணெய் /நெய், எலுமிச்சை சாறு, சோயா சாஸ் + உப்பு இவற்றைப் போட்டு நன்கு பிசைந்து வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் அதிலேயே மசாலா போட்டு பிசைந்த சிக்கனைப் போட்டு, தீயை மிதமாக வைத்து கிளறி விடவும்.
சிக்கன் சுமார் 15 நிமிடத்திற்குள் பூப்போல வெந்துவிடும். இதில் கறிவேப்பிலை, மல்லிதழை +புதினா தூவி இறக்கவும்.