FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on September 04, 2016, 10:35:26 PM

Title: ~ மஷ்ரூம் சோயா கீரை புலாவ் ~
Post by: MysteRy on September 04, 2016, 10:35:26 PM
மஷ்ரூம் சோயா கீரை புலாவ்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2Fimages%2FMysteRy%2520-%2520Forum%2Fkaee.jpg&hash=b11659d552956a1b38f743686263898f9f316e09)

மஷ்ரூம் – 50 கிராம்,
சோயா – 50 கிராம்,
கேரட் – 25 கிராம்,
வாழைக்காய் – 25 கிராம்,
கீரை – 2 கைப்பிடி,
வெங்காயம் – 1,
இஞ்சிபூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
தக்காளி – 1,
பச்சைமிளகாய் – 2,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிது,
தேங்காய்ப்பால் – 1/2 டம்ளர்,
தண்ணீர் – 1/2 டம்ளர்,
கடலைப்பருப்பு – 25 கிராம்,
பாசுமதி அரிசி – 150 கிராம்,
பட்டை, ஏலம்,
கிராம்பு – தலா 1,
உப்பு, எண்ணெய்- தேவைக்கு.

அரிசியையும், பருப்பையும் களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். சோயாவை வெந்நீரில் நனைத்து பிழிந்து எடுத்து வைக்கவும். மற்ற காய்கறிகளை அலசி நறுக்கி வைக்கவும். குக்கரில் எண்ணெயை காயவைத்து அதில் பட்டை, ஏலம், கிராம்பு போட்டு வெடிக்க விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி, தக்காளி, கொத்தமல்லி, மஷ்ரூம், சோயா, மிளகாய்தூள், மஞ்சள்தூள், வாழைக்காய், கேரட், உப்பு சேர்த்து நன்கு வதக்கி வேக விடவும். பிறகு அரிசி, பருப்பு வகைகளை சேர்த்து தேங்காய்ப்பால் ஒன்றுக்கு ஒன்றரை பங்கு வீதம் ஊற்றி கொதிக்கவிட்டு குக்கரை மூடும் போது கீரையை பொடியாக அரிந்து சேர்த்து 2 விசில் விட்டு அடுப்பை அணைத்து விட்டு 5 நிமிடம் அதே சூட்டில் தம்மில் விட்டு இறக்கவும். சுவையான மஷ்ரூம் சோயா கீரை புலாவ் ரெடி.