FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on September 01, 2016, 11:21:38 AM

Title: ~ முட்டை மசாலா சாதம் ~
Post by: MysteRy on September 01, 2016, 11:21:38 AM
முட்டை மசாலா சாதம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FLDKE6Ef.jpg&hash=1182aea67b06f41f5c4dfa6a29e096907ca23d4f)

தேவையானவை :

அரிசி – 1/4 கிலோ,
முட்டை – 4,
பெரிய வெங்காயம் -2,
தக்காளி – 3,
பச்சை மிளகாய் -2,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
தனியா தூள் – 1/2 டீஸ்பூன்,
கறி மசாலா – 1 டீஸ்பூன்,
பட்டை – சிறிது,
கிராம்பு – 2,
ஏலக்காய் – 1,
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – 4 ஸ்பூன்.

செய்முறை :

* சாதத்தை உதிர் உதிராக வடித்து, 1 ஸ்பூன் எண்ணெய் கலந்து ஆற வைக்கவும்.
* அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடித்ததும், நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* தக்காளி மசிந்து வதங்கியதும், எல்லா தூள்களையும், உப்பையும் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* பிறகு முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு கிளறவும்.
* கொஞ்சம் தளர இருக்கும் பொழுதே, ஆற வைத்த சாதத்தை போட்டு நன்கு கலந்து, 5 நிமிடம் கழித்து இறக்கவும்