FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 31, 2016, 09:38:57 PM
-
பாசிப்பருப்பு – பன்னீர் ஸ்டஃப்டு சப்பாத்தி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F08%2Fjo-1.jpg&hash=63e1f0d3387c696a3d0f9a8fe7723c50fd270a49)
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – 2 கப்,
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
பாசிப்பருப்பு – முக்கால் கப்,
பன்னீர் துருவல் – 5 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய், பூண்டு – தலா 2 (மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்),
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
* பாசிப்பருப்பை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து, ஆறியதும் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு – பச்சை மிளகாய் விழுதை போட்டு நன்கு வதக்கவும்.
* பிறகு, அரைத்த பாசிப்பருப்பு விழுது, பன்னீர் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
* கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும்.
* ஒரு சப்பாத்தியின் நடுவே பாசிப்பருப்பு – பனீர் கலவையை வைத்து அதன் மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து ஓரங்களை நன்கு ஒட்டி, தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
* சுவையான சத்தான பாசிப்பருப்பு – பன்னீர் ஸ்டஃப்டு சப்பாத்தி