FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: RemO on February 01, 2012, 09:57:59 AM

Title: கண்களுக்குக் குளிர்ச்சி தரும் கோவைக் கீரை!
Post by: RemO on February 01, 2012, 09:57:59 AM
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாக விளங்கும் கோவைக்காயைப் போல அந்த கொடியில் உள்ள இலைகளும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. வேலிகளிலும், தோட்டங்களிலும் தன்னிச்சையாக வளர்ந்து உள்ள இந்த கீரை இனிப்பு, கசப்பு என இரண்டு வகையான ருசிகளைக் கொண்டது.

கற்கோவை, வரிக்கோவை, அப்பைக் கோவை, செங்கோவை, கருங்கோவை என ஐந்து வகை கோவை உள்ளதாக சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கசப்பு சுவை கொண்ட கோவைக் கீரையை மசியல் செய்தோ, பொரியல் செய்தோ சாப்பிடலாம். இது உணவு ஜீரணத்திற்கு ஏற்றது. மற்ற கீரைகளில் உள்ள சத்துக்களை இது தக்கவைக்கும் தன்மை உடையதால் முற்காலத்தில் பிற கீரைகளுடன் சேர்த்து சமைக்கும் பழக்கம் இருந்துள்ளது.

சரும நோய் தீரும்

கோவை இலையானது இருமல், வாதநோய், பெருவிரணம், சிறு சிரங்கு, உடல் சூடு, நீரடைப்பு போன்றவற்றை நீக்கும்.

கோவை இலையை கொதிக்கின்ற வெந்நீரில் போட்டு பதினைந்து நிமிடம் கழித்து வடிகட்டி கொடுக்க உடல்சூடு, சொறி சிரங்கு, நீரடைப்பு, இருமல் நீங்கும். இலையை காயவைத்து பொடி செய்து, மருந்தாக கொடுத்தாலும் இந்த நோய்கள் நீங்கும்.

கோவை இலையை எண்ணெயில் கொதிக்க வைத்து படை, சொறி, சிரங்கு போன்றவைக்கு பூசலாம் சருமநோய்கள் குணமாகும்

கண்ணுக்கு குளிர்ச்சி

கோவைக் கீரையானது கண்ணுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோவை இலையை அரைத்து சாதாரண புண்ணுக்கும், அம்மையினால் உண்டான இரணங்களுக்கும் மேலே பூச புண் ஆறும்.