FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 31, 2016, 08:45:04 PM
-
ஒற்றை தலைவலிக்கு இயற்கை வைத்தியம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F08%2F%25E0%25AE%2592%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AF%2588-%25E0%25AE%25A4%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%25B5%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581-%25E0%25AE%2587%25E0%25AE%25AF%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2588-%25E0%25AE%25B5%25E0%25AF%2588%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg&hash=2cd0903caf7f0053d07d655a0dc71c5e5eb7408a)
ஒற்றை தலைவலி வரக்காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும். ஒற்றை தலைவலி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.
காரணம் : குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் பாலுணர்வு ஆனந்தம்.
அறிகுறிகள் : இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி, கண் மங்குதல், வயிறு பிரச்சினைகள்
தீர்வுகள் : பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. எனவே எது தங்களுக்கு பொருந்துகிறது என கண்டறிந்து தீர்வுகளை செயல்படுத்தவும்.
1. எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.
2. நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும்.
3.கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.
4. குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டவும்.பின் கைகளையும், கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலனை தரும்.
5.அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை மூன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.
6. 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம். இதுமிகவும் விலைமதிப்பானது.
7. (அ)200மிலி பசலைக்கீரை சாறு மற்றும் 300மிலி கேரட் சாறு (அ)100மிலி பீட்ரூட் சாறு, 100மிலி வெள்ளரிச் சாறு மற்றும் 300 மிலி கேரட் சாறு இந்த இரண்டு கலவைகளில் ஒன்றை தினமும் பருக வேண்டும்.
8.வாசனை எண்ணெயால் தலைக்கு ஒத்தடம் தரலாம். தேய்த்தும் விடலாம்.