FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Yousuf on July 19, 2011, 03:52:28 PM

Title: பள்ளிகளில் பாலியல் கல்வி!!!
Post by: Yousuf on July 19, 2011, 03:52:28 PM
பள்ளிக்குழந்தைகளுக்குப் பாலியல் கல்வியாம்! அரசியல்வாதிகளுக்குப் பகுத்தறிவு முத்திப் போனால் இப்படித்தான் சிந்திக்கத் தோன்றும் போலிருக்கிறது! யாராவது பல்குத்தும் குச்சியால் கண்ணில் விழுந்த தூசியை எடுப்பார்களா? இனி நம் பிள்ளைகள் கணித சூத்திரங்களோடு காமசூத்திரமும் கற்பார்கள்! அநியாயம்! அக்கிரமம்!!

வரும் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்குப் பாலியல் கல்வி போதிக்கப்படுமாம்! நாடு உருப்படுமா? ஏற்கனவே தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களால் படுக்கையறைக் காட்சிகள் படிப்பறைக்குள் வந்து விட்டன. ஒழுக்கச் சீர்கேட்டின் வாசல்களைத் திறந்து வைத்ததால் எயிட்ஸ் அரக்கன் நுழைந்தான்! திருமண உறவின்றி உடலுறவு கொள்வது மேற்கத்திய நாட்டினருக்கு வேண்டுமானால் பொழுதுபோக்காக இருக்கலாம்! திருமணம் என்பது நமக்கு வாழ்க்கை!

திருமண உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் "உன் குழந்தையும் என் குழந்தையும் நம் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்" என்பது போன்ற உரையாடல்கள் மேற்கத்திய நாடுகளில் சகஜம்! தன் பெயருடன் தந்தை பெயரை இனிசியலாகக் கொண்டால் மட்டும் போதாது! தந்தை யாரென்றும் தெரிய வேண்டும்!

பெரும்பாலான இந்தியப் பெண்கள் திருமணத்திற்கு முன்பே உடலுறவில் ஈடுபட்டவர்கள் என்று நடிகை குஷ்பு சொன்னதை எதிர்த்தவர்கள் பாலியல் கல்வியையும் கட்டாயம் எதிர்க்க வேண்டும்! செக்ஸ் ஒரு புதிரா புனிதமா? என்பதை முடிவு செய்யவேண்டிய அவசியம் பள்ளிக் குழந்தைகளுக்கு எதற்கு?

பெற்றோர்களே! இனிமேல் பள்ளிமாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் பற்றியும், ஆசிரியையுடன் கள்ளத் தொடர்பு கொண்ட தலைமையாசிரியர் பற்றியும் குற்றம் சாட்டப்பட்டால், "பாலியல் கல்விக்குச் செயல்முறைப் பயிற்சி எடுத்தோம்" என்று சொல்லப் படலாம்! உஷாராகுங்கள்!!

எயிட்சை குணப்படுத்த முடியாது! ஆனால் பாதுகாப்பான உடலுறவுகள் மூலம் தடுக்கலாமாம்!! பில்கேட்ஸ் முதல் புள்ளிராஜாவரை இப்படிச் சொல்லிச் சொல்லியே இந்தியாவில் ஐம்பது இலட்சம் எயிட்ஸ் நோயாளிகள்!! வல்லரசாகவிருக்கும் நம் நாட்டிற்கு ஒழுக்கசீலர்கள் தேவை!

பாதுகாப்பான உடலுறவு சரியே என்று சொல்லும் எயிட்ஸ் பிரச்சாரங்களால் ஏற்கனவே எயிட்சில் வல்லரசாகி விட்டோம்! போதுமய்யா எயிட்ஸ் வளப்புப் பிரச்சாரங்கள்!


பள்ளிகளில் பாலியல் கல்வியை முப்பதாண்டுகளுக்கு முன்பே செயல் படுத்திய

    * பிரிட்டனில் ஐந்திலொரு மாணவி திருமனத்திற்கு முன்பே கருவுறுகிறாள்!

    * ப்ரான்சில் ஆண்டுதோறும் பன்னிரெண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிப்பருவ பிரசவங்கள்!

    * 1970களில் பாலியல் கல்வியை மாணவர்களுக்குக் கற்பித்த பிரிட்டனில் 11% கர்ப்பினிகள் பள்ளி மாணவிகள்!

    * பிரிட்டனின் தேசிய புள்ளியியல் அலுவலக (Office for National Statistics ) அறிக்கையின்படி 13-15 வயதுக்குள் கர்ப்பமடையும் பெண்கள் 1995 இல் 8.5/1000 என்ற விகிதாச்சாரத்திலிருந்து 1996 இல் 9.4 ஆக உயர்ந்தது!

    * பள்ளிப்பருவத்தில் கர்ப்பமடைந்த பெண்களில் 75% சதவீதத்தினர் 15 வயதுக்குட்பட்டவர்கள்.
    * பாதிக்கும் மேற்பட்ட இளங்கர்ப்பினிகள் கருச்சிதைவுக்கு ஆளானவர்கள்!

    * 1997 இல் எடுக்கப்பட்ட பிறப்புவிகித புள்ளி விபரப்படி (Birth Statistics 1997) இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு திருமணங்களின் விகிதாச்சாரம் மிகக்குறைந்த எண்ணிக்கையை எட்டியது!

    * இதே காலகட்டத்தில் திருமண உறவல்லாமல் பிறந்த குழந்தைகளின் விகிதாச்சாரமும் அதிகரித்தது! ஏறக்குறைய 37% குழந்தைகள் திருமண உறவுக்கு வெளியே பிறந்தனர்.

      http://news.bbc.co.uk/1/hi/health/232937.stm

அமெரிக்காவில் பாலியல் கல்வி போதிக்கப்பட்ட பிறகும் டீன்ஏஜ் பருவ கர்ப்பங்கள் குறைந்த பாடில்லை. 2000 ஆம் ஆண்டு புள்ளி விபரப்படி டீனேஜ் கர்ப்பினிகள் 8,21,810 (ஆயிரத்தில் 84 கர்ப்பினிகள் டீனேஜில் கர்ப்பம் அடைந்தவர்கள்; கனடாவில் ஆயிரத்துக்கு 34 கர்ப்பினிகள் டீனேஜில் கர்ப்பமடைந்தவர்கள்!)

http://www.pregnancy-info.net/teen_pregnancy_statistics.html

பாலியல் கல்வி வேண்டுவோர், சமூக ஒழுக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் சீரழிந்த மேலைநாடுகளிமிருந்து முதலில் பாடம் கற்றுக் கொள்ளட்டும்! மாணவர்களுக்கு பாலியல் விழிப்புணர்வு அவசியம்! அதை எப்படிச் சொல்ல வேண்டும்? திருமண உறவற்ற பாலுறவுகள் பாவம் என்பதை போதிக்க வேண்டும்! ஐந்தறிவு மிருகங்களைப்போல் முறையற்ற உறவுகள் அநாகரிகம் என்றும் போதிக்க வேண்டும்!


பள்ளி மாணாக்கர்களை கனவு காணச்சொல்லுங்கள்! கலவு அல்ல!!


நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக் கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. (குர் ஆன் 17:32 )
Title: Re: பள்ளிகளில் பாலியல் கல்வி!!!
Post by: Global Angel on July 19, 2011, 09:00:47 PM
saaptavanukkuthan  pasi ennuvnagaa athavathu oru visaytha therinchukita atha inum try pananumnu thonum.... panni paakmnu thonrathu iyalbu..... athaan nadathutu eruku.... ;D
Title: Re: பள்ளிகளில் பாலியல் கல்வி!!!
Post by: Yousuf on July 19, 2011, 09:03:45 PM
Unga karuththai theliva sollunga anjel puriyala yenakku onnum...!!! :o