FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on August 27, 2016, 11:54:27 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 115
Post by: MysteRy on August 27, 2016, 11:54:27 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 115
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Charm ( Daffodillies ) அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F115.jpg&hash=bb06affcb498bd197bb6a3cc39e3d0d7906ae8e8)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 115
Post by: thamilan on August 28, 2016, 08:16:37 AM
மனிதர்கள் நாங்கள் ஆனால்
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு விதமாய்
நம்மை நாமே பிரித்து கொள்கிறோம்

ஜாதி மதம் பணம் எனும்
ஆயுதங்கள் கொண்டு
மனிதஜாதி தன்னைத் தானே
கூறு போட்டுக் கொண்டது
ஜாதி மதம் பணம் இவை
மனிதன் தானே கூறு போட்டுக்கொள்ள
கண்டுபிடித்த கத்தரிக்கோல்
 
பணம் மனிதனை
 உச்சாணிக்கொம்பிற்கும் அகால பாதாளத்துக்குமாய்
பிரிக்கிறது
உழைக்கும் வர்க்கமே உயர்ந்தது
என்பது மாறி
இருப்பவன் உயர்ந்தஜாதி
இல்லாதவன் ஏழைஜாதி என
மனிதனை பிரித்தது  பணம்

பணமும் இருப்பவனையே தேடித் செல்கிறது
இல்லாதவனிடம் இருந்து
இருப்பதும் பிடுங்கப்படுகிறது

உழைப்பவனின் உழைப்பை உறிஞ்சி
கொழுக்கிறது இந்த பணக்காரவர்கம்
ஏன் நம் அரசாங்கங்கள் கூட
வரி என்ற பெயரில்
இல்லாதவனிடம் இருந்து தானே
இருப்பதையும் பிடுங்குகிறது

இந்த பணக்கார வர்க்கங்கள்
ஏழைகள் என்ற வர்கத்தை
என்றும் வைத்திருக்கும்
அவர்கள் வியர்வை தானே
பணக்காரர்கள் தழைத்து வளர
முக்கிய காரணம் 

பணக்காரர்களிடம் இருப்பது
பணமூட்டைகள்
ஏழைகளிடம் இருப்பதோ
கவலை மூட்டைகள்
திருடர்கள் வருவார்கள் என
பணமூட்டைகளை பூட்டி வைத்திருக்கும் பணக்காரர்கள்
ஏழைகள் கவலை மூட்டைகளை திருட மாட்டார்களா
என திறந்தே வைத்திருக்கிறார்கள்
திருடத்தான் நாதி இல்லை

வல்லான் பொருள் குவிக்கும்
பொதுவுடைமை நீங்கி
வரவேண்டும் நம் நாட்டில் பொதுவுடைமை
எனும் பாரதியின் கூற்று
நனவாக வேண்டும்
ஏழை பணக்காரன் என்ற பிரிவினை
அகல  வேண்டும்
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 115
Post by: JEE on August 28, 2016, 01:05:34 PM
ஏழ்மையில் இருப்பவர் ஏழை
வறுமையில் இருப்பவர் வறியவர்!!

பட்டம் பெற்ற யாவரும் அறிவுள்ளோரா?
அறிவிலிகள் கற்றிருந்தாலும் கல்லாரே;
 பட்டம்  பெறா யாவரும் அறிவுள்ளோரா?
அறிஞர்களோ கற்காதவராயினும்கற்றோரே     

வறுமையிலேஇருப்பினும்  எச்சூழலிலும்
பிறனிடம்  பிச்சைக்கு  கைநீட்டாதோர்
இவ்வுலகில்  செல்வர்களே...........

செல்வர் களும் பிறர்க்கு ஒன்றும்
உதவாராயினும் வறியோரே......

எவருக்கும் உதவிய அம்மகிழ்ச்சியில் 
இன்பம் கண்டு  வாழத்தெரியாதோர்க்கு
எத்தனை கோடிகள் இருந்தும் என்ன பயன்?


வறுமைக் கோட்டுக்கு கீழ்எத்தனை
சதவீதம்  வாழ்கின்றார்களென்ற கணக்கீடு
எடுத்தால் மட்டு்ம் போதுமா?

வறுமை ஓழிக்க பலப்பல திட்டம்
தீட்டினால் மட்டு்ம் போதுமா?

பெரும் செல்வந்தன் செல்வந்தனாகவே வாழ்கிறான்
பெரும் ஏழை ஏழையாகவே வாழ்கிறான்....

செயல்பாடு வேண்டும்   
ஆலைகள் பல  வேண்டும்
ஆறுகுளம் தூர் வார வேண்டும்  ...

ஆட்கள் சோம்பல் களைய  வேண்டும்
ஊழைக்க எண்ணம் வேண்டும் ....
.
நம் நாடு செழிக்க வழிவகை உண்டோ?
கேட்டு விடைகாண்.......கண்டுபிடி.............

ஏழை பணக்காரன் இல்லாத நாட்டிற்கு
பயணம் போகுமுன் அதனை இங்கே காண
வழியுண்டோ சொல்்..........

வாழ்க வளமுடன்..........
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 115
Post by: ரித்திகா on August 28, 2016, 03:38:19 PM
சிரிப்பதா அழுவதா
எனும் நிலை இது ....
உழைப்பவன் மிதிபடுகிறான்
மிதிப்பவன் சொகுசாய் காலாட்டுகிறான் ....

மனிதனின் குணம் பார்த்து
இடை போடும் காலம் அழிந்து ....
செவ்வகம் வடிவிலானக் காகிதம்
அவனை இடை போடும் காலம்
ஜெனித்துள்ளது.........

பணம் கொடுப்பவன் ஏழை
ஆகிறான் ....
பணம் வாங்குபவன்
பணக்காரன் ஆகிறான் .....
இதை தான் விதியின்
திருவிளையாடல் என்பார்போல....

மூன்று வேலைச் சோற்றுக்கு
ஒருவன் அல்லாடுகிறான் ....
இன்னொருவன் ஒரு வேலை
உணவை உண்ண முடியமால்
குப்பையில் எறிகிறான் ....

ஏழைத் தன் ரத்தத்தை வேர்வையென
சிந்தி உழைக்கிறான் ...
பணக்காரன் ,ஏழை சிந்திய
வேர்வையில் குளிர் காய்கிறான் ....

பிச்சை எடுத்தாராம் பெருமாள்
அதை புடிங்கி தின்னாராம்
அனுமான் என்பது போல்
பணத்திற்கு உரியவன்
குடிசையில் வாழ்கிறான் ....
அதை புடிங்கியவன்
கோட்டையில் வாழ்கிறான் ....
 
ஒருவன் பணம் சேர்க்கும்
வெறியில் மிருகமென
மாறுகிறான் .....
இன்னோருவன் பணம்
வேண்டுமென்ற சோதனையில்
பலியாகிறான் ....

இவ்வாறு வேறுபாடுகள்
மனிதநேயத்தை ஒழிகின்றது...
பணக்காரன் என்ன ....
ஏழை என்ன ....
இருவருமே மனிதர்கள் தானே ....

வறுமையில் வாடிவாதகும் ஏழை ...
ஆணவத்தில் ஆடி தீர்க்கும்
பணக்காரன் .....
மூச்சடங்கும் நேரத்தில் இருவரும்
நாடுவது நிம்மதியைத்தான் .....

பணத்தை தேட ஆரம்பித்த
பயணம் ....
ஓடினோம் ஓடுகிறோம்
ஓடுவோம் .....
பணத்தை தேடி ....
தொலைத்தது நிம்மதியெனும்
பொக்கிஷமென தெரியாமல் அறியாமல் .....
இதுவே இக்கலியுகத்தில்
வாழ்க்கையென  மாறியுள்ளது ...........
மாறுகிறது ...இன்னமும் மாறுமோ ........

~ !!.. நன்றி ..!! ~
~ !!..ரித்திகா..!! ~
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 115
Post by: DaffoDillieS on August 29, 2016, 12:46:35 AM
வயிற்றில் பசியோடு
மனத்தில் வலியோடு..
உடலில் சோர்வோடு..
கண்களில் ஏக்கங்களோடு..
உழைத்து ஓடாய்த் தேய்ந்த கைகளோடு..
நிச்சயம் விடியல் வரும் எனும் நம்பிக்கையோடு..
பணம்திண்ணிக் கழுகுகளின் நடுவே நாங்கள்!

வேர்வையும் ரத்தமும் சிந்தி..
நித்தமும் உணவுக்குப் போராடி..
சேர்த்து வைத்தோம் எங்களின் உழைப்பை..!
எங்களிடம் அதையும் திருட நினைக்கும்..
முதலாளிகளாகிய நீங்கள்!

ஐந்தரிவு கொண்ட விலங்கு கூட..
தன் இனத்தைத் தானே..
வேட்டையாடத் தயங்கும் போது..
எங்களின் உழைப்பை வேட்டையாடும்..
ஆறரிவு படைத்த நீங்கள்..
விலங்கினும் கீழ்..
மனிதாபிமானமில்லா உயிரினமாகிப் போனீரோ!

வாழ்வோ சாவோ..
நேர்மையுடன் இருத்தல் வேண்டும்..!
உழைப்பாளிகளின் கஷ்டங்களில்..
குளிர் காயும் முதலாலிகளே..
இருக்கிறதா மனசாட்சி?!

சேட்டுக் கடையில் நாங்கள் பணத்திற்கு..
அடகு வைத்தோம் பொருள்..!
மனசாட்சியை அடகு வைத்து ஒரு கட்டத்தில்..
விற்றுத் திண்றவர்கள் நீங்கள்.!.

தவறு செய்தால் ஒரு பிடி சோற்றுக்கே திண்டாடுவோமே..
என்ற பயத்தில் நாங்கள்..!
தவற்றைக் கௌரவமாகக் கருதுபவர்கள் நீங்கள்..!
பெற்ற பிள்ளைக்கு அத்தியாவசியங்களைக் கொடுக்கவே..
திணறுபவர்கள் நாங்கள்..!
பணம் இருந்தும் பிள்ளைகளை..
ஊதாரிகளாக்குபவர்கள் நீங்கள்..!

புண்ணியவான்கள் இருக்கத்தான்  செய்கிறார்கள்..!
பாம்பின் உள்ளே மாணிக்கங்கள் இருப்பதைப்போல!
மாதருள் மாணிக்கங்களும் உள்ள உலகத்திலே தான்..
உங்களைப்போன்ற உழைப்பை உறிஞ்சும்..
அட்டைப்பூச்சிகளும் வாழ்கின்றன!

திருடுவதைத் தவிற உங்களுக்கு..
வேறேதும் தெரியாதிருப்பின் ..
எங்களின் உயிர்களைத் திருடுங்களேன்!!
உழைப்பை..
வாழ இருக்கும் பாவப்பட்ட பிள்ளைகளுக்கு..
விட்டு வையுங்களேன்!


நன்றி

 





Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 115
Post by: NavYa on August 29, 2016, 09:44:31 PM
காக்கைகுருவி எங்கள்ஜாதி நோக்கும் திசையெல்லாம்
நாமின்றி வேறில்லை என்றான் பாரதி, ஏழைகளை.....
பணம் எங்கள்ஜாதி  நோக்கும் திசையெல்லாம்
பணமின்றி வேறில்லை என்கிறான் பணக்காரன்....

அடிமைகளாய் அடுத்தவனிடம் சில நூறு
ஆண்டுகள் வாழ்ந்து விடுதலை பெற்றோம் ...
ஆனால்  ஏழைகள் இன்றும் உரிமைகள் மறுக்கப்பட்டு
உணர்வில் மட்டும் இந்தியனாய் - விடுதலை
பெற்றும் அனுபவிக்க முடியாத அடிமைகளாய்...

யானையின் வயிற்றுக்கு எத்தனை கவளங்கள்
அள்ளிப்போட்டாலும் அடங்காத அதன் பசிபோல
பணக்காரனின் எண்ணம்.....

அக்கவளத்தில் சில பருக்கையாவது மிஞ்சாதா
என்ற ஏக்கத்துடன் நினைப்பது
ஏழையின் எண்ணம்....   
 
 இரும்பு மனம் படைத்த பணக்காரனே - காலை
கதிரவன் உதயமாகும் பொழுதிருந்து 
மாலை அஸ்தமனம் ஆகும்வரையிலும்
 
ஏழை உடலை இயந்திரமாக்கி உன் வெற்றிக்காய்
உழைக்கிறான் - நீயோ
ஏழை மனதை ரணமாக்கி குறைவான
ஊதியத்தை தருகிறாயே  ......                 

ஏழையின் பையிலோ பணமில்லை மனமுண்டு...
பணக்காரனிடமோ  பணமுண்டு மனமில்லை...         
ஏழை வசதி இல்லாமல் வறுமையில் வாழவில்லை
ஏழையிடம் வறுமையோ வசதியாக வாழ்கிறது .......           

கண்முன்னே பசிபட்டினியுடன் வாழ்கிறான் ஏழை!...
கண்ணுக்கு தெரியாத கடவுளுக்கு - விருந்து
படையல் வைக்கிறான் பணக்காரன் !!....         

பணம் படைத்தவர்களே பணம் மட்டுமே
வாழ்வில் பெருமையல்ல..
வறுமையில் உழலும் ஏழைகளுக்கு உதவினால்
மட்டுமே அப்பணத்திற்கு பெருமை...         

பணக்காரர்களே இனியாவது சிந்தியுங்கள்
உங்களுக்காக - வாழ்வை
அர்ப்பணிக்கும் ஏழைகளும் மனிதர்களே....

ஏழையை சகமனிதராக நினைத்து என்றுமவர்
வாழ்வில் முன்னேற தோள் கொடுத்து
தூக்கி விடுங்கள்..             

ஏழை பணக்கார பேதமின்றி
உழைப்பவன் எல்லாம் மனிதனே என்ற
சமத்துவத்தை கொண்டு வாருங்கள்....
மனிதர்களாக வாழ பழகுங்கள்
வாழ்க மனிதம் ....
Title: வேர்வை துளி
Post by: BlazinG BeautY on August 29, 2016, 10:45:03 PM
இப்புவியில் சிலபலவிஷயங்களில் 
பணம் நிர்ணயிக்கப்படுகிறது
ஏழை  -  பணக்காரன்
ஏற்றம் -  தாழ்வு 
வறுமை -செழுமை
ஏன்  இந்த  நியதி ?

கஷ்ட  படுகிறது  ஏழ்மை  …அவர்களின்
ரத்தத்தை  உறிகிறது  பணக்கார  வர்க்கம்
ஏன்?  இந்த  கொடுமை  இப்புவியில்...

இதயமே..
இல்லாமல்  எடுக்கிறான்  அவர்களின் 
உழைப்பை...வியர்வையை 
அவர்களுக்கே  தெரியாமல்  திருடுகிறான் …
ஒரு   கொடூர  மிருகம் …

வெட்க  படவேண்டும்   இந்த  சமுதாயம் ..
பார்த்தும் பார்க்காமலும்   போகிறது ..
அவர்களும்  ஒரு  ஜீவன் தான்
அவர்களுக்கும் மனம் உண்டு ,
குடும்பம் உண்டு,  குழந்தை உண்டு
இதை  அவர்கள்  உணர்ந்தால் 
திருட  மனம்  வராது  …

பணம் உள்ளவர்களுக்கு 
பணத்தை இழக்க மனம்  வராது
ஆனால் பிடிங்கி தின்ன ஆசை வரும்
ஏதும் சுலபமா கிடைக்குதுனா
ஒண்ணுமே இல்லதாது போல்  பாவனை
ஏழையின் வயிற்றில் அடிக்க மட்டும் ஆசை ..

உதவிஎன்று கேட்டால் உடன் பதிலோ
இல்லை என்பது .. ஓடி ஒழிவர்  சிலர் 
உதவி கேட்டால் முன் வந்து நிற்பர் ஏழை,
ஏதும் தோன்றாது அவர்கள் எண்ணத்தில்...
உதவி செய்யணும் மட்டும் தோன்றும்
அவர்களும் என்னை போல்..
அவர்களின் வலி எனக்கும் அப்படியே ..
 
எங்களையும் வாழ விடுங்கள் ,
எங்களுக்கும் மனம் உண்டு ,
எங்கள் சுமையை சுமக்க வழி விடுங்கள் ..
எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள் பணக்கார வர்க்கமே ...

என்றும் பொறுமலுடன்,
பிளேஸ்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 115
Post by: பொய்கை on August 29, 2016, 11:48:23 PM
தாய் கொடுக்கும் கூழை!
தினம் ஒரே ஒரு வேளை!
சாப்பிடும் நேரம் அதி காலை!
பின் இரவும் பகலும் வேலை!
என்றும் நானோ ஒரு கோழை!
என் பெயர்தான் ஏழை !

என்  உழைப்பில் நீ காணும் சோலை!
மாறிடாது ஒரு நாளும் பாலை!
என் உழைப்பை சுரண்டும்  வேளை!
உன் இறுதி பயணமதில் விழுந்திடும் மாலை!
சிந்தித்ததில்லை எந்தன் மூளை!
அதனாலோ என்றும் நானோ  ஏழை !

தினம் உழைக்கும் என் வீடோ ஓலை!
போட்டிடுவாய் என் வீடு நோக்கி ஒரு சாலை!
பூகம்பம் வந்திட்டால் ஒரு வேளை!
உனக்காக தந்திடுவேன் என் வீட்டு கூழை !
என் உழைப்பை சுரண்டும் நீ ஒரு கோழை!
தெரிந்தே வாழும் என்பெயர்தான் ஏழை !

ஒருநாள்  இவுலகம் உறித்திடும் உன்  தோலை
அன்று இந்த ஏழையுமே மீட்டிடுவான் யாழை !
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 115
Post by: SweeTie on August 30, 2016, 03:44:15 AM

ஏழ்மையும்  செல்வமும் இரட்டைக் குழந்தைகள்
அறிவும் ஆற்றலும்  உள்ளது ஓன்று
சோம்பலைகூடவே கொண்டது ஓன்று
சேர்க்கை  சரியில்லை என்றால் தாயவள் குற்றமா

போதும் என்ற வாழ்க்கை பொன்செய்யும் மருந்தென்று
பேசாமலே தினம் தினம் செத்துமடியும்  கோழையவன்
பிற்போக்கு சிந்தனைகள்  சுய நம்பிக்கையின்றி
ஒதுங்கி வாழும்  ஏழையவன்

புத்தியை ஆயுதமாய்  ஏந்தி  சித்தியைத் தழுவ எண்ணி
இருப்பதை இரட்டிப்பாக்க உழைப்பவன் செல்வந்தன் .
உறுதியான எ ண்ணங்களோடு   நம்பிக்கையின் சிகரமாய்
அடிமேல்  அடிவைத்து  வெற்றியை இலக்காக க் கொள்பவன்

வரும்போது யாரும் கொண்டுவந்ததில்ல  பணம்
இன்றய கோடீஸ்வரர்கள்  நேற்றைய  ஏழைகள்
அவரவர்  கடின உழைப்பு அங்கு அடக்கம்
கண்ணுக்குத் தெரியாத கஷ்டங்களின்  பின்னணிகள்

ஆண்டவன் கொடுத்த மூளை அவரவர்க்கு போதும்
ஏழ்மையும்  செல்வமும்  அவரவர்  முயற்சியும் உழைப்பும் 
நம்பிக்கையும் நாணயமும்  வெற்றிப்பாதைக்கு வழி
உனது வாழ்க்கை உனது கையில் வீறு கொண்டெழு  தோழா !
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 115
Post by: BreeZe on August 30, 2016, 05:32:13 AM



ஏழை பணக்காரன்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
ஒரு காகிதம் மனிதனின் தரத்தை தீர்மானிப்பதா
இன்று நம்கையில் இருக்கும் பணம்
நாளை இன்னொருவர் கைகளில்

இல்லாதவன் உடல் தேய
உதிரம் வற்ற மாடாய் உழைக்கிறான்
அந்த  உழைப்பை உறிஞ்சி
 உடல் வளர்க்கும் அட்டைகளான பணக்காரன்
ராஜபோக வாழ்க்கை வாழ்கிறான்
என்ன உலகம் இது

தொழில் சாலைகளின் மூலப்பொருளாய்
ஓட்டல்களில் எச்சில் இலைகளாய்
பிச்சையெடுக்கும் போது செல்லாக்காசுகளாய்
எத்தனை எத்தனை முகங்கள்
இந்த ஏழைகளுக்கு

மாடிமேல் நின்று
அண்ணாந்து பார்க்கும் பணக்காரர்களே
கொஞ்சம் குனிந்தும் தான் பாருங்களேன்
கூரை  இல்லாத ஏழைகளின் குடிசைகள்
கண்ணுக்குத் தெரியும்

எத்தனை கோடி கோடியாக சம்பாதித்தென்ன
ஒரு ஜான் வயிற்றுக்கு மேல்
ஒரு பிடி கூட உண்ண முடியாதே

ஏழைகள் இவர்கள் திடீரென இறந்தாலும்
கண்களில் வைக்க
இரண்டு நாயணங்கள் கூட இருக்காது
பணக்காரர்கள்
லஞ்சம் ஊழல் என
பணத்தாலே எரித்தாலே
இவர்கள் பிணமும் சாம்பலாகும்

எத்தனை கோடி பணமிருந்தும் என்ன
நாம் போகும் போது
ஏதும் நன் கூட வருவதில்லையே
நான் சேர்த்து வாய்த்த
தான தருமங்கள் புண்ணியங்கள்
இவை மட்டுமே கூட வரும்

பதிப்புரிமை
BreeZe



Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 115
Post by: சக்திராகவா on August 30, 2016, 09:37:58 AM
ஓடை மீனுக்கு
ஓடாய் தேய்ந்தொருவன்
அவன் கூடை மீனுக்கு
அனுமதியோடொருவன்

திரண்டவன் மீதேரி
திருவிழா தேர் பார்க்க
அலண்டவன் அடிமை
அமர்ந்தவன் அரசன்

ஏய்த்து ஏய்த்து ஏறி நின்று
மண்டியிடு மாறுமென்பார்
மண்டியிட்டோர் மாண்டபின்பு
மறதி வந்து தீருமென்பார்

ஏமாளி ஏர்பிடித்தால்
எருமையும் எஜமான்
உழைத்தவன் வேர்வை
உலர்ந்த நிலத்தில்

மாற்றம் வேண்டாம்
மனிதனாய் மதி
ஏற்றம் வேண்டாம்
எடுப்பதை விடு

ஏழ்மை யாதெனில்!
வறுமை சூழ்வதா.? இல்லை
பசி வருமுன் சாவதா.?

சக்தி ராகவா