FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 26, 2016, 07:43:25 PM

Title: ~ பாட்டிவைதியத்தில் பெண்களுக்கான தீர்வுகள் ~
Post by: MysteRy on August 26, 2016, 07:43:25 PM
பாட்டிவைதியத்தில் பெண்களுக்கான தீர்வுகள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FtYlmwci.jpg&hash=748a78f7d0769e347fb597b82da005cdd75c7de8)

*மாதவிலக்கு பிரச்சினை உள்ளவர்கள் வெங்காயத்தாள், காய வைத்த கருப்பு எள், கருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து கொள்ளவும் மாதவிலக்கு தடைபடும் காலங்களில் காலை மாலை இருவேளையும்  ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு ஏற்படும்

*விளா மரத்தின் பிசினை மஞ்சள் சேர்த்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைபடுதல் குணமாகும்

*வாழைப்பூவை இடித்து சாறு எடுத்து அ தில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் வெள்ளைபடுதல் குணமாகும்

*வல்லார கீரை சாற்றில் பெரும் சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு கோளறு சரியாகும்

*லவங்கப் பட்டையை பொடி செய்து தினமும்2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின்போது  அதிக இரத்தப்போக்கு நிற்கும்

*முள் இலவம் பட்டையை 200 கிராம்அளவுக்கு எடுத்து பொடிசெய்து  காலை மாலை இருவேளையும்  5 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு ஏற்படும்

*முருங்க கீரையை அடிகடி உணவில் சேர்த்து கொண்டால் கருப்பை பலப்படும்.