FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 25, 2016, 10:37:51 PM

Title: ~ பீட்ரூட் துவையல் ~
Post by: MysteRy on August 25, 2016, 10:37:51 PM
பீட்ரூட் துவையல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FgXUjRZx.jpg&hash=2bea32b2cc4a722ae5dd32daad0dc98c439c3280)

தேவையான பொருட்கள் :

பீட்ரூட் 1
சின்ன வெங்காயம் 200 கிராம் or பெரிய வெங்காயம் 1
வர மிளகாய் 5
தனியா 1 மேசை கரண்டி
சீரகம் 1 மேசைகரண்டி
தேங்காய் 2 கீற்று
கறிவேப்பில்லை சிறிது
புளி – 2 புளிக்கொட்டை அளவு
ஆயில் 2 மேசை கரண்டி
உப்பு தேவையான அளவு .

செய்முறை:

முதலில் பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும் .
அடுப்பில் வாணலியை வைத்து அதில் வெங்காயம், மிளகாய், தனியா, சீரகம், கறிவேப்பில்லை போட்டு ஆயில் விட்டு வதக்கவும்.
வதங்கிய பிறகு பீட்ரூட்டை சேர்க்கவும் . நன்கு வதக்கவும் .
இப்போது தேங்காய், புளி ,உப்பு சேர்த்து வதக்கவும்.
2 நிமிடம் வதங்கியதும் இறக்கி ஆற வைக்கவும் .ஆறியவுடன் தண்ணீர் விடாமல் அரைக்கவும்