FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on August 24, 2016, 08:22:04 PM

Title: நாம் மனிதர்கள்
Post by: thamilan on August 24, 2016, 08:22:04 PM
நாம் மனிதர்கள்

எலிகளைக் கண்டு பயப்படுகிறோம்
புலிகளைக் கண்டும் பயப்படுகிறோம்

பூச்சிக்கும் பயப்படுகிறோம்
ஏச்சிக்கும் பயப்படுகிறோம்

இருட்டுக்கும் பயப்படுகிறோம்
திருட்டுக்கும் பயப்படுகிறோம்

சண்டைக்கும் பயப்படுகிறோம்
சாவுக்கும் பயப்படுகிறோம்

கடவுளுக்கும் பயப்படுகிறோம்
கனவுக்கும் பயப்படுகிறோம்

நாம் மனிதர்கள்

!!மனசாட்சிக்கு மட்டும்
பயப்படுவதே இல்லை!!