தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: KaBiLaN on August 24, 2016, 12:53:40 PM
Title: கருத்த புள்ளைக்கு கவிதை எழுதுறேன்...
Post by: KaBiLaN on August 24, 2016, 12:53:40 PM
காட்டுவழி போற என் தோகைமயிலே ! கண்ணால பேசுற என் கருங்குயிலே!! தளுக்கி மினுக்கி நீ நடக்கையில தள்ளாடுதடி மாமன் மனசு அது உங்கிட்ட வழுக்கி விழுந்து போகுதடி! வார்த்தை பேசாம ஊமையாவும் ஆகுதடி !!
சிவத்த சிமிக்கி போட்ட கருத்தபுள்ள சிக்குன்னு சடை முடிஞ்ச சின்ன புள்ள பூசேலை கட்டி போறவளே நான் சொல்லாம என் மனசுக்குல வாரவளே..
மண்ணுல மெதுவா நீ பாதம் பதிச்ச !..... என் மனசுக்குல ஒன் நெனப்ப மருதாணியா ஏன் வச்ச !!.. உச்சிவகிடு பார்த்துட்டு உருகுலைஞ்சு போனேன்! உன்னை நெனச்சு பொலம்புற பைத்தியம் ஆனேன் !!..
நிலத்தை பாத்து நடக்குரவளே மேல நிமிந்து கொஞ்சம் பாரடிம்மா - உன்னைநெனச்சு ஏங்கி போயி நான் இருக்கேன் - அருவாள விட்டுடு கையாலயே நாத்து அருக்கேன்....அதை ஆத்தா பாத்துட்டு அடிக்க வாறா அப்பன் பார்த்துட்டு பிடிக்க வாரார்....
உன் கண்ணால அடிச்ச காதல் அடியில... என்னால நெல் அறுக்க முடியல ..... கொஞ்சம் கொஞ்சமா உசுரை எடுத்தவளே! தூங்க முடியாம என் நித்திரைய கெடுத்தவளே !!.. அறுவடை நெல்லு மாறி நீ குனிஞ்சது போதும்.. என் ஆத்தாளை பார்த்து பணிஞ்சது போதும்...
வயக்காட்டுல ஓடி திரியலாம் வாடி புள்ள... அதுல கெடைக்கிற சந்தோசத்தை எப்படி நான் சொல்ல... கை பிடிக்காம நீ போன கலங்கிடுவேன் நானு !- என் நெலம அப்புறம் தரைல தள்ளாடுற மீனு !!
கண்ணுக்குள்ள இருக்குற கருத்த மேனிக்காரி நெஞ்சுக்குள்ள போன நெத்திலி உடம்புக்காரி - உன் கொலுசொலி கேக்கும்போது தன்னால கொஞ்சி நான் பேசுறேன் ! .. ஈட்டியா நீ பாக்கும்போது உன் முன்னால கொஞ்சம் நான் கூசுறேன் !!..
இப்போ நான் இருக்குறேன் உன் மேல பைத்தியம் முத்தி - நெறைய சொல்லிட்டே இருக்கலாம் உன்னை பத்தி... ரெட்டை சடை போட்டவளே !.... மாமா நீயான்னு கேட்டவளே !!....
சீக்கிரம் வாடி சிங்கார பொண்ணே கல்யாணத்த பண்ணிக்கலாம் கருத்தா ரெண்டு குழந்தை பெத்துக்கலாம் கருப்பாயி உன்னை பார்த்து இருக்கேன் ! கண்மாகரையில காத்து இருக்கேன் !!
- கருத்த புள்ளைக்காக கபிலனின் கானம் தொடரும்
Title: Re: கருத்த புள்ளைக்கு கவிதை எழுதுறேன்...
Post by: SweeTie on August 24, 2016, 06:15:55 PM
என்னமா எழுதி இருக்கீங்க .....உங்க கவிதை படிக்கப்ப மாமன் நெனைப்பே வந்துருச்சு .....அதும் என்னய கருத்தபுள்ள கருத்தபுள்ளனு கூப்புடும்..... செம கவிதை கபிலன். வாழ்த்துக்கள்
Title: Re: கருத்த புள்ளைக்கு கவிதை எழுதுறேன்...
Post by: KaBiLaN on August 25, 2016, 04:45:10 PM
உங்க மாமன் நெனைப்பு வந்துச்சா மனசுக்கு அது சந்தோஷமும் தந்துச்சா... :) நன்றி sweety ..