FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 21, 2016, 10:55:01 PM
-
அவல் கேசரி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2F3hJi6qv.jpg&hash=4d81cda7b3af35b81feb1372684bf9ae394d0dca)
அவல் – 1 கப்
சர்க்கரை – 1/2 கப்
தண்ணீர் – தேவையான அளவு
ஏலக்காய் பொடி – 1 தேக்கரண்டி
முந்திரி – 2 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
ஒரு ஜாரில் அவலை எடுத்து நன்றாக அரைத்து வைக்கவும். இப்போது அதில் தண்ணீர் ஊற்றி பிசைந்து வைக்கவும். ஒரு கடாயில் 1 ஸ்பூன் நெய் விட்டு நறுக்கி வைத்துள்ள முந்திரி சேர்த்து பொன் நிறமாக வறுத்து ஒரு கிண்ணத்தில் போடவும். மற்றொரு தேக்கரண்டி நெய் ஊற்றி பிசைந்து வைத்துள்ள அவலை சேர்த்து 1 நிமிடம் சமைக்கவும். பின் அதில் சர்க்கரை சேர்த்து கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாகும் வரை அடுப்பை சிம்மில் வைத்து சமைக்கவும். பிறகு அதனுடன் ஏலக்காய், சிறிது நெய், வறுத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து கிளறினால் அவல் கேசரி தயார்.