FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on August 19, 2016, 07:11:07 PM
-
சுகமாய் இருக்கிறது
இப்போதெல்லாம்
மனைவியின் கை சூட்டைவிட
மகனின் கைச்சூடு
மனைவியின் முத்தத்தை விட
மகளின் முத்தம்
மனைவியோடு தனிமையை விட
குழந்தைகளோடு தனிமை
அதிகமாக பயணிக்கிறேன்
தாரத்தின் திசை மாறி
தகப்பன் திசையிலே
இந்த ரசவாதம்
இழப்பின் குறியீடா - எனில்
எதை இழந்தேன்!!!
இழந்ததினால் தானே பெற்றேன்
எப்படி இழப்பாகும்!!!
இது இழப்பு அல்ல
இயல்பு என அறிந்தேன்
இயல்பே இழப்பானது
இழப்பே இயல்பானது
-
உங்கள் பக்குவத்தைப் பார்த்து வியக்கிறேன் தோழரே.
அருமை உங்கள் கவிதை. வாழ்த்துக்கள்.