FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on January 31, 2012, 04:51:29 PM

Title: இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?
Post by: Yousuf on January 31, 2012, 04:51:29 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-pSjnYH64toE%2FTyOTI4sWZkI%2FAAAAAAAAEz4%2FRzpqUyOE9Uk%2Fs1600%2Findia_flag.jpg&hash=dc8adaf791f5e80322306ebc16e839b91511b54a)

வேண்டிய வடிகால்கள்
வீட்டிலேயே இருக்க
வேலிதாண்டிபோகும்
உத்தமிகளும்!

வகைவகையாய் பரிமாறியும்
பசியடங்காமல்
பலவீட்டில் பசியாரும்
உத்தமர்களும்.

உருப்படியான
உடல்களைக் கொண்டும்
ஊழைக் கொழுப்பெடுத்து
உழன்று புரழுது சாக்கடையில்!

ஒவ்வாத மனங்களுக் கிடையில்
ஓடவழியின்றி
ஊறி நாறுது தெருவரையில்!

அச்சானியில்லாமல் ஓடும்-இவர்களின்
அந்தரங்க வாழ்க்கை
அசிங்கத்தையே தேடியோடி
அடையும் வேட்கை!

வடிகாலின்றி ஓட நினைக்கும்
வாழ்க்கைக் கழிவுகளை-எங்கே
வடிப்பதென தெரியாமல் விழிப்பதே
இவர்களின் இழிநிலைந்த
அன்றாட வாழ்க்கை...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.