FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JerrY on August 15, 2016, 06:51:05 PM

Title: சுதந்திர தினம் ?¿?? ( in joker way )
Post by: JerrY on August 15, 2016, 06:51:05 PM
காந்திஜீயின் அகிம்சை சிரிப்பு -இன்று
கரன்சி நோட்டில் காட்சி!
சாராயம் வித்த காசுல தான்
நடக்குது இங்க குடிமக்கள் ஆட்சி!

நேத்தாஜி விதைத்த இந்தியன் வீரம்
ஆங்கிலேயனோடு போச்சு!
ஜல்லிக்கட்ட அடகுவச்சு நிக்குது
தமிழன் தன்மான உணர்ச்சி!

பகத்சிங் பஞ்சாப்சிங்கும் -எங்க
தல பாரதி பாடுச்சு!
முல்லை பெரியாறு, காவிரி தண்ணி கிடைக்காதான்னு
எங்க ஜனம் தேடுச்சு!

தாகூர் பாடுன தேசீயகீதம்-நான்
இந்தியன் என்கின்ற கிளர்ச்சி!
இன்னைக்கு வள்ளுவனுக்கே சிலை வைக்க வடமாநிலத்தில நடக்குது பார் பல கிளர்ச்சி!

பிபிசி தமிழ் தந்திடீவி வரை வந்து ஒலிக்குது
ஆனால் அகில இந்திய வானொலியோ
பிராந்தியமொழிகளில் செய்திகள் வேண்டாமுனு மறுக்குது!

பிள்ளைங்க படிக்க சரியான பள்ளிக்கூடம் இல்ல
ஆனா கிளீன் இந்தியானு சொல்லி கக்கூசுல காச கழுவுறாங்க!

ஓடி ஓடி உழைச்ச சனம்
யானை கட்டி போர் அடிச்ச இனம்!
ஒலிம்பிக்கோட வாசல் நின்னு வாய்பிழந்து வேடிக்கை பார்க்கிறான்
ஒரு தங்கம் வாங்காதா
இந்த நூறுகோடி சனத்துக்காகனு!

காமராஜர் ஆட்சிதான்
இப்ப வேணும்னு கேட்டவன்லாம்
கலாம்னு ஒருத்தரு இருந்தாரு
அவர் காலம் போனவரை தோனலையே!

இன்னும் இருக்குது இந்த தேசம்
இழுத்துக்கிட்டே இருக்குது இந்த தேசம்
இளைஞனே எழுந்து வா!!
ஒலிம்பிகல்ல உலகமே இந்தியாவை வியப்பாய் பார்க்கட்டும்!!

இவன் ..

இரா.ஜகதீஷ் ..