FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 14, 2016, 11:01:08 PM
-
க்ரீன் பீஸ் மசாலா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FFAPjtQd.jpg&hash=09ec8289ea564188593916c6705bba2efb966c46)
பச்சைப்பட்டாணி – 250 கிராம் (அல்லது) காய்ந்த பட்டாணி – 150 கிராம்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2 அல்லது 3
உருளைக்கிழங்கு – 2
சீரகம் – அரை தேக்கரண்டி
ஏலக்காய் – ஒன்று
கிராம்பு – 2
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
சிவப்பு மிளகாய்த் தூள் – ஒன்று அல்லது ஒன்றரை தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் – ஒரு தேக்கரண்டி
ரீஃபைண்ட் ஆயில் – ஒரு மேசைக்கரண்டி
வெண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி (விரும்பினால்)
பச்சை கொத்தமல்லித் தழை – 2 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
உப்பு – சுவைக்கேற்ப
வெங்காயம் மற்றும் தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கவும். உருளைக்கிழங்கை சிறு சதுரத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, ஏலக்காய், கிராம்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ப்ரஷர் பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து வெடித்ததும் அரைத்து வைத்துள்ள விழுதினை ஊற்றி கிளறி விடவும்.
அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறி விட்டு கொதிக்க விடவும்.
கலவை சிறிது நேரம் கொதித்ததும் பட்டாணி, நறுக்கிய உருளைக்கிழங்கு, சிவப்பு மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி பேனை மூடி வைத்து வேக விடவும்.
கிழங்கு வெந்து கலவை கெட்டியானதும் இறக்கி பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி மேலே வெண்ணெய் சேர்க்கவும்.