FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 13, 2016, 08:40:33 PM
-
முளைவிட்ட பாசிப்பயறு பீட்ரூட் தோசை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2Fa2mzpqE.jpg&hash=ad7c902ebdc09e75a56d50fe22bebf9d3dd23884)
தேவையானவை :-
பச்சைப் (பாசிப்) பயறு – 200 கிராம்.
பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரிந்தது.
பீட்ரூட் – கால் பாகம்
பச்சை மிளகாய் – 1
பூண்டு – 3 பல்
இஞ்சி – 1 இன்ச் துண்டு
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்.
துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்துமல்லி இலை – 1 டீஸ்பூன்
ஜீரகம் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 20 கிராம்.
செய்முறை :-
பாசிப்பயறை முதல்நாள் பகலில் கழுவி ஊறவைக்கவும்.
4 மணி நேரம்கழித்து தண்ணீரை வடித்து மஸ்லின் துணி அல்லது காட்டன் துணியில் இறுக்க மூட்டையாகக் கட்டி தொங்கவிடவும் இரவு முழுவதும்..அல்லது ஒரு டிஃபன் பாக்ஸில் அல்லது காஸரோலில் போட்டு டைட்டாக மூடி வைக்கவும். மறுநாள் காலை முளை விட்டு இருக்கும்..
இந்த முளைவிட்ட பயறு., பச்சை மிளகாய்., இஞ்சி., பூண்டு., மிளகாய்ப் பொடி., உப்பு., ஜீரகம்., தேங்காய்த்துருவல்., பீட்ரூட்., கொத்துமல்லித்தழை., வெங்காயம் எல்லாம் போட்டு கரகரப்பாக அரைக்கவும் .
தோசைக்கல்லைக் காயவைத்து மெல்லிய தோசைகளாகத் தடவி எண்ணெய் ஊற்றி திருப்பிப் போட்டு நிதானமான தீயில் நன்கு வேகவைத்து எடுக்கவும்.
நன்கு வேகாவிட்டால் சாப்பிட முடியாது..
சூடான தோசையை கருவேப்பிலை கொத்துமல்லி புதினா துவையலோடு பரிமாறவும்.