FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 13, 2016, 08:35:14 PM
-
காரட் குடைமிளகாய் மல்லி கோசம்பரி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2Fk4TlmVT.jpg&hash=32c2027a3d72e349686621cb18017c040a5ab47a)
தேவையானவை :-
பாசிப்பருப்பு – 1 கப்
காரட் – 1 டேபிள் ஸ்பூன் துருவியது
குடைமிளகாய் – 1 டேபிள் ஸ்பூன் பொடியாக அரிந்தது
கொத்துமல்லி – 1 டேபிள் ஸ்பூன் பொடியாக அரிந்தது
தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – ¼ டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 மூடி
எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு – ½ ஸ்பூன்
செய்முறை :-
பாசிப்பருப்பைக் களைந்து 4 மணி நேரம் ஊறவிட்டு நீரை வடித்து வைக்கவும்.
அதில் உப்பு காரட் குடைமிளகாய் கொத்துமல்லி தேங்காய் எலுமிச்சை சாறு கலந்து எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து நிவேதிக்கவும்.