FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 11, 2016, 02:40:35 PM
-
முள்ளங்கிக் கீரை வதக்கல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FW4z7jFL.jpg&hash=67965050988b47e3975a49cba0870858387c2788)
பொதுவாக தண்ணீர் சத்து நிறைந்த எல்லா கிழங்கு வகைகளுக்கும் மேல்புறத்தில் இலைகள் தழைத்து வளர்ந்திருக்கும். அதுபோல் முள்ளங்கிக் கிழங்கின் மேல்புறமும் வளர்கின்ற இலைகளைதான் முள்ளங்கிக் கீரை என்கிறோம். நாம் பெரும்பாலும் அப்படிப்பட்ட கீரைவகைகள் பற்றி கவனம் செலுத்துவதில்லை. முள்ளங்கிக் கீரையை எடுத்துக் கொண்டாலும், எப்போதும் முள்ளங்கியை மட்டும் நாம் சமையலுக்குப் பயன்படுத்திவிட்டு, கீரையை எறிந்துவிடுகிறோம். ஆனால், முள்ளங்கியைவிட இந்த கீரையில்தான் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளன!
தேவையான பொருட்கள்:
(பொடிதாக நறுக்கிய) முள்ளங்கிக் கீரை - 6 பிடி
காய்ந்த மிளகாய் - 3
(நறுக்கிய) வெங்காயம் – 1
இன்ஸ்டண்ட் வெஜிடபிள் பவுடர் – 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 கப்
உப்பு – 1/2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, முதலில் காய்ந்த மிளகாயை துண்டுகளாக கிள்ளிப் போட்டு தாளிக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயத்தில் பாதியளவு போட்டு சற்று பொரிய விடவும்.
நறுக்கி வைத்துள்ள முள்ளங்கிக் கீரையைக் கொட்டி, மீதி வெங்காயத்தையும் சேர்த்து கிளறவும்.
கீரை வதங்க ஆரம்பிக்கும்போது வெஜிடபிள் பவுடர் சேர்த்து, உப்பு சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து நன்கு வதங்கி, கீரை வெந்தவுடன் தேங்காய் துருவலைக் கொட்டி 2, 3 நிமிடங்கள் வதக்கவும்.
வித்தியாசமான சுவையுடன் கூடிய, சத்துக்கள் நிறைந்த முள்ளங்கிக் கீரை வதக்கல் ரெடி!
குறிப்பு:-
சூடான வெள்ளைச் சோற்றில் சிறிது நெய் விட்டு இந்த ‘முள்ளங்கிக் கீரை வதக்கலை’ப் போட்டு புரட்டி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சளித் தொல்லை இருந்தால் அப்போது கொடுக்கவேண்டாம். கேஸ் ப்ராப்ளம் உள்ளவர்கள் இதை சமைக்கும்போது 2 பல் பூண்டு எடுத்து பொடிதாக நறுக்கி தாளிக்கும்போது சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பொதுவாகவே இரவில் சாப்பிடுவதைத் தவிர்த்துக்கொள்ளவும். இந்த கீரையின் பலன்களையும் யாரெல்லாம் (எப்போது) சாப்பிடக்கூடாது என்பதையும் சற்று விளக்கமாக பார்க்க இங்கே க்ளிக் பண்ணவும்.