FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 11, 2016, 02:35:33 PM
-
வாழைப்பூ கீரை கடைசல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FD6WeAPD.jpg&hash=c672fc1e577651d5d8c74e42818391efe74550de)
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ – 1
முருங்கைக் கீரை – 4 கப்
பாசிப் பருப்பு – 75 மில்லி
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
இறால் ஸ்டோக் – பாதி (சுமார் 5 கிராம்)
எண்ணெய் – 3 ஸ்பூன்
மல்லித் தூள் – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு - 1/2 ஸ்பூன்
செய்முறை:
வாழைப்பூவை அதிலுள்ள (தீக்குச்சி போன்ற) நரம்பை நீக்கிவிட்டு, பொடிதாக நறுக்கி உப்பு கலந்த தண்ணீரில் 1/2 மணி நேரம் போட்டு வைக்கவும்.
வாழைப்பூ கீரை கடைசல்,valaipoo samayal kurippugal
வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் பச்சை மிளகாயைப் பொரியவிட்டு நறுக்கிய வெங்காயத்தில் பாதி போட்டு தாளிக்கவும்.
பிறகு உப்பு தண்ணீரில் ஊற வைத்துள்ள வாழைப்பூவை வடிகட்டி அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
வாழைப்பூ வதங்கியவுடன் சுத்தம் செய்த முருங்கைக் கீரையை கொட்டி வதக்கவும்.
2,3 நிமிடங்கள் வதங்கிய பிறகு வேகவைத்த பாசிப்பருப்பைக் கொட்டி நன்கு கடையவும்.
இப்போது இறால் ஸ்டோக், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் போட்டு மீண்டும் குழையும்வரை நன்கு கடையவும்.
குழைந்தவுடன் இறக்கி சூடாக பரிமாறவும்
குறிப்பு:-
– பொதுவாக சமையலுக்கு மொந்தன் வாழைப்பூவும், ரஸ்தாலி வாழைப்பூவும் அருமையாக இருக்கும். துவர்ப்பும் குறைவாக இருக்கும்.
– கீரை மற்றும் வாழைப்பூவை சுத்தம் செய்யும்போதே பருப்பை வேகவிட்டால் நேரம் மிச்சமாகும்.
– இறால் ஸ்டோக்கில் உப்பு சேர்த்திருப்பதால் உப்பு போடும்போது (வாழைப்பூவின் அளவைப் பொறுத்து) பார்த்து போடவும்.
– இறால் ஸ்டோக் விரும்பாதவர்கள் வெஜ் ஸ்டோக் சேர்த்துக் கொள்ளலாம்