FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 10, 2016, 04:29:37 PM

Title: அறுவகை புயல்களாய் ....
Post by: aasaiajiith on August 10, 2016, 04:29:37 PM
நின் மூக்குத்தி மலர்மீதினில்
அமர்ந்து அமரத்துவமடையும்
வாய்ப்பு வாய்த்திடாத
விரக்தியினில்
விருட்டென
வேகமாய்
வெகு வேகமாய்
வெளியேறிய
காற்றை காற்றுகளின்
ஒருசேர்ந்த
ஒற்றை கோப வெளிப்பாடே
அறுவகை புயல்களாய் ....
Title: Re: அறுவகை புயல்களாய் ....
Post by: SweeTie on August 10, 2016, 05:19:52 PM
என் ஒற்றைக்கல் வைர மூக்குத்தியில் அமரும்  கொசு அமரத்துவம் அடைந்தாலே பதறிப் போய்விடுவேன்.   விரக்தி  விஸ்வரூபம்  எடுக்காமல்  இருக்கட்டும்.    கவிதையில்   சூடு தெரிகிறது.    அழகான கவிதை.   மனமார்ந்த பாராட்டுக்கள். 
Title: Re: அறுவகை புயல்களாய் ....
Post by: aasaiajiith on August 10, 2016, 06:06:06 PM
விழி வழியே  இவ்வரிகளை
வாசித்துவிட்டு அவ்விழிகளின்
வழியே மூக்குத்தியை பார்த்திருந்தால்
வரலாறுகாணாத வெற்றியை
இவ்வரிகள் பெற்றுவிட்டதாக
வகுத்துக்கொள்கிறேன் !!

வந்து
வாசித்து
வாழ்த்து
வரம்
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றி !!
Title: Re: அறுவகை புயல்களாய் ....
Post by: ரித்திகா on August 13, 2016, 10:15:22 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.glitters123.com%2Fglitter_graphics%2FFlowers%2FFlowers-Glitters-10.gif&hash=d2bc7fbb55ba6421baddf091734f570772a43164)

மிக அருமையான கவிதை !!!!
 
 வாழ்த்துக்கள் ...!!!!
  அழகான  கவிதையைப்
    படைத்ததற்கு
        நன்றி....!!!!
Title: Re: அறுவகை புயல்களாய் ....
Post by: aasaiajiith on August 13, 2016, 11:03:00 AM

வருக !
தொடர் வாசிப்பும் தருக !!
தொடர் பதிப்புகளை பெறுக !!


வந்து
வாசித்து
வாழ்த்து
வரம்
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றி !!