FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JerrY on August 10, 2016, 01:24:57 PM

Title: யானை
Post by: JerrY on August 10, 2016, 01:24:57 PM
சேர , சோழ , பாண்டியனின்
அசையும் சொத்து இது ..
உலகமே உற்று பார்க்கும்
வியப்பின் ஆச்சிரிய குறி ¿?

கால்கள் எல்லாம் தூண் ஆக
தாங்கி நிற்க்கும் கோபுரமே ..
கண்கள் எல்லாம் சிலையாக
எவன் வடித்த ஓவியமோ ¿?

உன் தும்பிக்கை மூக்கினிலே
பலருக்கு நீ தந்ந முத்தம் ..
பயம் கலந்த காதல் உலகின்
முதல் எதார்த்தின் அழகு ¿?

குழந்தைகளின் மனம் கவர்ந்த
மும்முதற் கடவுளே ..
மனித இனம் நிமிர்ந்து பார்க்கும்
கனவுகளின் கருமையே ¿?

நீ பிச்சை கேட்டு தும்பிக்கை துக்கையிலே இதயம் இறுகி
கண் தேடுது கற்று கொடுத்த கயவனை .¿


உன் தந்தங்களுக்காய் நீ
மண்ணில் சாய்ந்த போது
மனம் கேட்ப்பது மனிதனுக்கும்
மனிதநேயம் உண்ட என்று .¿


அசைந்தாடும் மலை ..
கருப்பின் பெருமை ¿?

இவன் ..

இரா.ஜகதீஷ
Title: Re: யானை
Post by: ரித்திகா on August 13, 2016, 10:03:23 AM
(https://lh3.googleusercontent.com/-yo-lMdT6z4o/V0opUfXWteI/AAAAAAAAyw0/REFyC0Ljjl42whlPYr67OSh5Kvnivc4pA/w426-h320/2016%2B-%2B1)

அருமை நண்பா !!!!
 
  ஆனையின் .
    சிறப்பையும் பெருமையும்
       மிக அழகாக வர்ணித்துள்ளீர் !!!!
           வாழ்த்துக்கள் !!!!
 இரா.ஜெகதீஷ் @ ஜெர்ரி
 
 நன்றி ....!!!!
   என்றும் நட்புடன் ,
      ரித்திகா !!!!!!!