FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 06, 2016, 09:25:19 PM
-
மலாய் லஸ்ஸி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2Fu5CjFdj.jpg&hash=f5736a327e3329cb4586dac34a10ec38613b0263)
தேவையான பொருட்கள் :
புளிப்பு இல்லாத கெட்டித் தயிர் – 2 பெரிய கப்,
சர்க்கரை – 6-8 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
மலாய் (பால் ஆடை) – தேவைக்கு,
பால் கிரீமுடன் சேர்ந்தது (சுண்டக் காய்ச்சியது) – 1/2 கப்,
பானையில் கடைவதால் இயற்கையில் சில்லென்று இருக்கும். தேவைப்பட்டால் ஐஸ் க்யூப்ஸ் சேர்க்கவும்.
குங்குமப்பூ – சிறிது,
ஏலக்காய் – 2,
அலங்கரிக்க தனியாக சிறிது பால் ஆடை, கிரீம்.
செய்முறை:
கெட்டித் தயிரை, சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து மத்தால் பானையில் கடைய வேண்டும். அதை கடையும்போது நுரைத்து வரும். நடு நடுவில் கெட்டி கிரீமுடன் பால் சேர்த்து கடைய வேண்டும். இதில் குங்குமப்பூவையும், ஏலக்காய் தட்டிப் போட்டு கடைந்து பானையில் பொங்க, பொங்க நுரையுடன் ஊற்றி அதன் மேல் சிறிது பால் ஆடையை வைத்து பரிமாறுவார்கள். இதன் ருசியும், மணமும் ஒரு தனி ஸ்பெஷல். சிலர் பனீர் எசென்ஸ், கோகோ வாங்கி பழங்கள், லஸ்ஸியில்
சேர்ப்பார்கள். சிலர் பாதாம், பிஸ்தா சீவல் சேர்த்து
அலங்கரித்து கொடுப்பார்கள்.
குறிப்பு:
பானை இல்லாவிட்டால் மிக்சியில் விட்டு விட்டு அடித்தால் நுரைத்து வரும்.