FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 06, 2016, 08:15:07 PM

Title: ~ இனிப்பான அடைப்பிரதமன் செய்வது எப்படி ~
Post by: MysteRy on August 06, 2016, 08:15:07 PM
இனிப்பான அடைப்பிரதமன் செய்வது எப்படி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FHcYuVmK.jpg&hash=2584c728cc00c2cfa9ee71e55d386beb963a8b85)

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – ஒரு கப்,
வெல்லம் – 100 கிராம்,
தேங்காய் – ஒன்று,
முந்திரி, திராட்சை – தேவையான அளவு
ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை,
நெய் – தேவையான அளவு,
எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை :

* தேங்காயை துருவி மிக்சியில் போட்டு அரைத்து பால் எடுக்கவும்.
* பச்சரிசியை ஊற வைத்து நைஸாக அரைக்கவும்.
* ஒரு தட்டில் எண்ணெய் தடவி பச்சரிசி மாவை ஊற்றி, ஆவியில் 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டவும்.
* அடுப்பில் அடிகனமான ஒரு பாத்திரத்தை வைத்து வெல்லக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அடை துண்டுகளுடன் ஏலக்காய்த் தூள் சேர்க்கவும்.
* அடுத்து அதில் தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
* கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை போட்டு வறுத்து அடைப் பிரதமனில் சேர்க்கவும்.
* கேரளாவின் பாரம்பரியமான டிஷ் இது!