-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-mbeFPqgc0Ps%2FTcM9_ZRksGI%2FAAAAAAAAKI8%2FMN6ksmY9dCw%2Fs320%2Fsparklingdivider_216220457_std.gif&hash=380fb21a21c6ab043108ba83f2737e20081ab7aa)
உயிர் போகும் வலியையும் தாங்கி
கடுகளவு சலிப்புமின்றி முகம்
எங்கும் புன்னகைப் பூத்து
இந்த உலகத்திற்கு வரவேற்றவள் ......
தன் இரத்தத்தைப் பாலாக்கி
பசியாற்றியவள் .....
பூப்போன்ற முகம் மலர்வதைக் கண்டு
அகம் மலர்ந்தவள் .....
சிறு முக சுருக்கத்தையும்
தாங்க இயலாமல்
இரு விழி கலங்குபவள் .....
குறும்புகள் செய்தால்
அதட்டுபவள்
அதட்டினாலும் செய்யும்
சேட்டைகளை ரசிப்பவள்.......
இறைவனின் மறு உருவமானவள் .....
வளர்ந்த பின்னும் மடியினில்
சாய்த்து தலைக் கோதி
தாலாட்டுப் பாட ஏங்குபவள் ....
பத்து மாதம் கருவில்
சுமந்து,
ஆயுள் வரை கருவிழிகளுக்குள்
சுமப்பவள் ....
அவள் தான் ,
உயிர் கொடுத்தவள்
உலகத்தை அறிமுகம் படுத்தியவள்
உலகமும் ஆனவள் ....
நம் தாயுமானவள்!!!!!
மறுஜென்மம் இருந்தால்
இதயமாக பிறக்க வேண்டும் .....
உயிருக்குள் உயிரைச்
சுமப்பவளின் உயிரை
ஆயுள் முழுவதும் சுமக்க ...!!!!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-dAHH-JfTY6I%2FUaxgo4jBZmI%2FAAAAAAAAAeY%2FkC8si_XkFy4%2Fs1600%2Fmother-child-transparent.gif&hash=f6545699f8fca67e2094c658c396cc1d9b22146f)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fclubfashionwizard.weebly.com%2Fuploads%2F4%2F7%2F7%2F2%2F47726055%2F1020105_orig.gif&hash=49eb463d28022dfa0fd44a07a34e2cd55989c8e9)
~ !! ரித்திகா !! ~
-
அருமை ரித்திகா ...தாயின் சிறப்பே சிறப்பு ... கவிதை வரிகளில் நீங்கள் மேலும் மெருகேற்றி விட்டீர்கள்
-
மிக்க நன்றி எமி !!! :)
-
நீர் வேண்டுமென்றேன் கடவுள் ஏரியை பரிசளித்தான்!
பூ வேண்டுமென்றேன் கடவுள் ஒரு பூங்காவை எனக்காய் தந்தான்!
மரம் வேண்டுமென்றேன் கடவுள் ஒரு வனத்தையே அருளிச்சென்றான்!
கேட்பதைவிட எல்லாமே அதிகமாய் அள்ளித்தரும்,, நீதான் வேண்டும் கடவுளே என்றேன்.......
அவன் தன்னைவிட மேலாய் உள்ள...
என் தாயை தந்துபோனான்!
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi242.photobucket.com%2Falbums%2Fff164%2Fablackflower%2FDark%2520Flowers%2FRoseVine.gif&hash=8dc624dddcd070d756c8b35d35e79a5c274a9214)
அருமை அருமை அருமை !!!!
அன்னை , நாம் கேளாமல்
இறைவனால்
கொடுக்க பட்ட வரம் !!!!
மிக்க நன்றி அண்ணா !!!!
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fhighzeek.heck.in%2Ffiles%2Fi-love-my-mom.gif&hash=c97d5016b7b1c11dc1b5a49dc7ab457169f56ebb)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-zqabHyCtdB4%2FVgjcxdj84yI%2FAAAAAAAAI6w%2FE0YdLRF0ZTE%2Fs640%2F1488449y6nt4757zq.gif&hash=4a2e7c7621a219fec23b2ed95dc462de40fb5716)
same same zam anna...hehehe
.....tq for commenttu!!!!!
-
அன்னையின் சிறப்பு அருமை..
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fp0.storage.canalblog.com%2F01%2F44%2F1235768%2F95368808.gif&hash=f9782328c7efaa9a12116742074babcf335f6380)
மிக்க நன்றி
தோழன் கபிலன் அவர்களே !!!!