FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on August 04, 2016, 08:19:09 PM

Title: காதலே கரையாதே !!
Post by: SweeTie on August 04, 2016, 08:19:09 PM

கொட்டும் பனித்துளியில் மெல்லிரவில்
யாருமறியாமல் ஒட்டி உறவாடி என் 
கண்ணில் நுழைந்து கலந்தவனே
விண்ணில் பறந்துவர முடியாமல்
சுவாசத்தில் தூது விட்டனையோ
தொட்டுக்கவா ....கட்டிக்கவா ....
பட்டுக் கன்னத்தில்  ஒட்டிக்கவா
கொவ்வை இகழ்களை  இதழ்களால்   
கொஞ்சம்   முட்டிக்கவா.......,,

மார்கழி மாத குளிர்நிலவு
விட்டு விட்டு காயும் வான்நிலவு
எட்ட நின்று ரசிக்கும் இள நிலவு   
சுண்டுவிரல் தீண்டா  சுடர் நிலவு
தொட்டுக்கவும்.. கட்டிக்கவும்.. ஒட்டிக்கவும்..
முட்டிக்கவும் தூதுவிடும்  முகிலரசன்
கண்கள் பட்டு விடும் பளிங்கு மேனியிலே
கும்மிருட்டில்  ஓடி மறைந்திடுவேன் 
சீக்கிரமே அவன்   பார்க்க முன்னர். .
 
Title: Re: காதலே கரையாதே !!
Post by: aasaiajiith on August 05, 2016, 05:02:16 PM
கொட்டும் பனித்துளியோடு நள்ளிரவில் - என்றிருக்கலாம் ....

தொட்டுக்கவா - தொட்டுக்கொள்ளவா
கட்டிக்கவா    - கட்டிக்கொள்ளவா
ஒட்டிக்கவா   -  ஒட்டிக்கொள்ளவா
முட்டிக்கவா  -  முட்டிக்கொள்ளவா என்றிருந்தால்  கவிச்சுவை முழுமை பெரும்


இழ நிலவு - இள நிலவு


மற்றபடி கவிதை மொத்தம் 
இனிமை
இனிமை
இனிமை ....
Title: Re: காதலே கரையாதே !!
Post by: SweeTie on August 05, 2016, 06:01:26 PM
நக்கீரா..... நள்ளிரவு என்றால்  அர்த்த ஜாமம்.   மெல்லிரவு  என்றால்  முன்னிரவு  மெதுமையான   காதலைச் சுவைக்க வல்ல  இரவு  என்பது பொருள்..  சிலவேளைகளில்  கவிதையில்   பேச்சுத் தமிழ்  கலக்கும்போது  கவிதையின் சுவை கூடுகிறது.  இல்லாமல்  நீங்கள் கூறியதுபோல  தொட்டுக்கொள்ளவா  கட்டிக்கொள்ளவா  முட்டிக்கொள்ளவா  என்றால்   அதில்  ரசனை கொஞ்சம்  மட்டமாய்  இருப்பதுபோல் ஒரு பிரமை.  என் கவிதையை  ரசித்து  சுவைத்து  படித்த  உங்களுக்கு என்  மனமார்ந்த நன்றிகள். என் கவிதை உங்களைப்போன்ற  பெரிய கவிஞர்களை  ஈர்த்ததில்  பெருமையடைகிறேன்
Title: Re: காதலே கரையாதே !!
Post by: aasaiajiith on August 09, 2016, 05:52:06 PM


சொற்குற்றமோ  பொருட்குற்றமோ  கண்டு கூறவில்லை .....
இரவு என்றதுமே மெல்லியதாய் ஆனபோது  அதை மெல்லிரவு என்பானேன் எனும் எண்ணத்தில் தான் ..

மற்றபடி பெரிய கவிஞன் என்று கூறி
திண்ணமாய் என்னை ஓரம்கட்ட எண்ணமோ ??

நானும் ஒரு கத்துக்குட்டிக்கவிஞனே ...

தரம்கூறி புறம் தள்ளல் வேண்டாம் !!


ஓரப்பார்வைக்கே ஓரமாய் போய் சாய்ந்துவிடுவேன்
இதில் நெற்றிக்கண்  வேறா ???? :o :o
Title: Re: காதலே கரையாதே !!
Post by: EmiNeM on August 09, 2016, 09:33:31 PM
அருமையான கவிதை சுவீட்டி...காதலின் துடிப்பும் நிலவின் செயலோடு ஒப்பிட்ட விதம் மிக அருமை ..உங்கள் காதலின் துடிப்பான வரிகளில் நான் அந்த காதலனாகி விடலாமா என்று தோன்றும் அளவிற்கு வந்துவிட்டேன்..  :D ;)
Title: Re: காதலே கரையாதே !!
Post by: SweeTie on August 10, 2016, 05:23:22 AM
பெண்ணின் பருவங்களை பேதை , பெதும்பை,  மங்கை,  மடந்தை, அரிவை.தெரிவை,   பேரிளம்பெண்    என்பதுபோல்  இரவின் பருவங்களும்  முன்னிரவு  பின்னிரவு.  நடுநிசி மெல்லிரவு   என்று  குறிக்கலாம் .  பெரிய கவிஞர் என்று கூறி பெருமைப் படுத்தினேனே தவிர  ஓரம்கட்டும் நோக்கம் கிஞ்சித்தும்  இல்லை.  ஓரப்  பார்வையில் நக்கீரன் ஓரம் சாய்வதா?.    பலே பலே !!! .............
Title: Re: காதலே கரையாதே !!
Post by: SweeTie on August 10, 2016, 05:32:47 AM
எமினெம்  நன்றி.   உங்கள்  துடிப்பைக்கண்டு  நான் வியக்கிறேன்.   
Title: Re: காதலே கரையாதே !!
Post by: aasaiajiith on August 10, 2016, 04:09:33 PM
ஹ்ம்ம்  ... பேழை இல்லை அது பேதை, பேரிளம்பெண் ..
Title: Re: காதலே கரையாதே !!
Post by: KaBiLaN on August 10, 2016, 04:19:33 PM
கவிதை அருமை...

Title: Re: காதலே கரையாதே !!
Post by: ரித்திகா on August 10, 2016, 04:20:28 PM
அருமையான கவிதை ஸ்வீட்டியே !!!!
  வாழ்த்துக்கள் !!!
     நன்றி !!!!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-858Yy1oGYIo%2FVk8a2uBuznI%2FAAAAAAAASfE%2FlEJtdfMu6Pw%2Fs1600%2FYELLOW.gif&hash=6bf696704ca37d6c64e2e5d5fbadb102074df837)
Title: Re: காதலே கரையாதே !!
Post by: SweeTie on August 10, 2016, 04:56:59 PM
நக்கீரா,   கல்லடியில்  தப்பினாலும்  உன் நெற்றிக்கண்ணடியில்  தப்பிக்கவே முடியாது.   நடுநிசியில் நித்திரையில் இருந்தவளை  நெற்றிப்பொட்டில்  அடித்து எழுப்பிவிடடாய் .   நன்றிகள் .....

கபிலன்,  ரித்திகா  நன்றிகள் 
Title: Re: காதலே கரையாதே !!
Post by: aasaiajiith on August 10, 2016, 05:15:19 PM
கல்லடி , கண்ணடி என்று கண்டபடி என்ன என்னவோ சொல்கிறாய்
நான் கூறியது வெறும் சிறு திருத்தம் தானே ....

தொடர்ந்து பதிப்பிடு  இனிமையே !
Title: Re: காதலே கரையாதே !!
Post by: SweeTie on August 10, 2016, 05:23:33 PM
உங்களைப்போல  நல்ல உள்ளங்கள் வாழ்த்தும்போது  தொடரும்  என் படைப்புகள் . நன்றி