FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 31, 2016, 11:27:37 PM

Title: ~ சுவையான முட்டை குருமா செய்வது எப்படி ~
Post by: MysteRy on July 31, 2016, 11:27:37 PM
சுவையான முட்டை குருமா செய்வது எப்படி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FvSQkBmu.jpg&hash=5c8bd79edf78f7dafb021d47277d4761117514a6)

தேவையான பொருட்கள் :

வெங்காயம் – 1
தக்காளி – 2
முட்டை – 4
பச்சைமிளகாய் – 4
பூண்டு – 4 பற்கள்
கொத்துமல்லி இலை – சிறிது
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு

அரைக்க :

தேங்காய் – 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி – 4
சோம்பு – 1டீஸ்பூன்

செய்முறை :

* 3 முட்டைகளை வேகவைத்து தோலுரித்து வைக்கவும்.
* மிக்சியில் தேங்காய், முந்திரி, சோம்பை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பூண்டை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் காயவிட்டு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளியைச் சேர்த்து குழையும்வரை வதக்கவும்.
* மிளகாய்த்தூள், கரம்மசாலா, உப்பு சேர்த்து மசாலா வாசம் போகும் வரை கிளறவும்.
* அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
* குருமா நன்றாக கொதித்ததும் வெந்த முட்டைகளை கத்தியால் அங்கங்கே கீறிவிட்டு குருமாவில் சேர்க்கவும்.
* 10 நிமிடங்கள் கழித்து இன்னொரு முட்டையை உடைத்து குருமாவில் ஊற்றி, மெதுவாக கலக்கி விடவும்.
* அடுத்து தீயைக் குறைத்து 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
* சுவையான முட்டை குருமா ரெடி!