FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 30, 2016, 11:50:58 PM
-
தால் மக்கானி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FeqhnDSb.jpg&hash=b4d7c799e94a6ef706f382f05d7fcb0f277961f6)
முழு உளுந்து – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 4
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
தனியாதூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
பட்டை – 1 துண்டு
சீரகம் – அரை டீஸ்பூன்
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:-
உளுந்தை நன்கு கழுவி, 6-லிருந்து 8 மணி நேரம் வரை ஊறவிடுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து பட்டை, சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு நிறம் மாறி வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தக்காளி சேருங்கள், தக்காளி நன்கு வதங்கியதும் ஊறிய உளுந்தை, அந்தத் தண்ணீருடனேயே (3 கப் அளவுக்கு) சேர்த்து, குக்கரில் வைத்து மூடி 3-4 விசில் வரும் வரை வைத்து இறக்குங்கள். பிரஷர் அடங்கியதும் மூடியைத் திறந்து தேவையான உப்பு சேர்த்து, மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு, ஐந்து நிமிடம் கழித்து இறக்கி லேசாக மசித்துவிடுங்கள், சூடாக இருக்கும்போதே வெண்ணெய் கலந்து சப்பாத்தி, ரொட்டிக்கு பரிமாறுங்கள்.