தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JerrY on July 29, 2016, 02:25:48 PM
Title: இயற்கையும் !! மனிதனும் ??
Post by: JerrY on July 29, 2016, 02:25:48 PM
காற்று வீசும் நேரத்திலே .. காதல் செய்யும் மரங்களே .. மரத்தின் காதோரம் அமர்ந்து .. காதில் சிணுங்கும் பறவை இனங்களே !!
ஆதவன் அசந்து கண்முட .. நிலவை தேடும் வெள்ளை மேகங்களே .. பனிப்போர்வை வந்து மூட .. காத்திருக்கும் மலையின் முகடுகளே !!
மயில்கள் எல்லாம் குடைவிரித்து விட்டன .. தன் நடன திறமையை சகாக்களுக்கு காட்ட .. பச்சை கம்பளம் விரித்து காத்துக்கிடக்கிறது .. வானம் இடிந்து மழையை கொட்ட .!!
சருகுகள் எல்லாம் சங்கு பிடிக்க .. மிருக இனங்கள் இயலாமையால் தலைகுனிய .. பறவைகள் கூச்சலிட ..
காட்டை காப்பேன் என்ற உறுதிமொழியோடு .. குடியேறினான் மனிதன் ..