FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 26, 2016, 10:14:57 PM
-
சிக்கன் காலிஃப்ளவர் மசாலாக்கறி!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2F5tsaXEu.jpg&hash=d240d56cd15caf01d28abfd2389a907bfb0e869a)
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
காலிஃப்ளவர் – 1 கப்
இஞ்சிபூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
பட்டை லவங்கம் – சிறிதளவு
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 3 அல்லது 4
மிளகாய்தூள் – 2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மசாலாவிற்குத் தேவையானவை:
கடலைப்பருப்பு – 3 ஸ்பூன்
சிகப்பு மிளகாய் – 6
மிளகு – 2 ஸ்பூன்
பட்டை – சிறிதளவு
சீரகம், சோம்பு – 2 ஸ்பூன்
தேங்காய் துருவியது – 1 கப்
செய்முறை:
* சிக்கனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து திட்டமான பீஸாக்கிக் கொள்ளவும்.
* உப்பும், மிளகாய்த் தூளும் இட்டு சிக்கனை 10 நிமிடம் பிரட்டி வைக்கவும்.
* தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் நீளவாக்கில் அரிந்துக் கொள்ளவும்.
* மசாலாக்களுக்குத் தேவையானவைகளை சட்டியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் இவைகளைப் போட்டு வறுக்கவும்.
சிக்கன் காலிஃப்ளவர் மசாலாக்கறி!
* கடைசியாக தேங்காய்பூவையும் போட்டு வறுத்து சற்று ஆறவிட்டு அதை மிக்ஸியில் போட்டு சற்று கரகரப்பாக அரைக்கவும்.
* சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு அது சூடானதும், பட்டை, லவங்கம் போட்டு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் அனைத்தையும் போட்டு பின்பு, காலிஃபிளவரை சேர்த்து லேசாகக் கிளறிவிடவும்.
* அது வதங்கியதும் பின்பு அதோடு இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். அதுவும் சற்று மசங்கியதும், அரைத்த மசாலாவையும் சேர்க்கவும்.
* அது எல்லாம் சேர்வதுபோல் கிளறிவிட்டு மிதமான தீயில் வைத்து வைத்து மூடவும். மசாலா வாசம் போய் நல்ல வாசம் வந்ததும் திறந்து நறுக்கிய கொத்தமல்லியை போட்டு இறக்கவும்