FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 25, 2016, 05:02:54 PM
-
காளான் குருமா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2F%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D-%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BEkalan-samayal-in-tamilkalan-recipeskalan-cooking-tips-1.jpg&hash=ac6330ccc5c1846e36e7254b6a63955d6b4b5404)
எண்ணெய் – 3 தேக்கரண்டி
வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – சிறிது
காளான் – 250 கிராம்
தடித்த தேங்காய் பால் – 1 1/2 கப்
முதலில் காளான்களை வெட்டி வைக்கவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வதக்கி அதனுடன் உப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நிமிடம் சமைக்கவும். தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இப்போது மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கி வெட்டி வைத்துள்ள காளான்களை சேர்த்து 5 நிமிடங்கள் சமைக்கவும். இப்போது தடித்த தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதி விட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான காளான் குருமா ரெடி.