FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 25, 2016, 05:00:22 PM
-
தயிர் வடை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2F%25E0%25AE%25A4%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%258D-%25E0%25AE%25B5%25E0%25AE%259F%25E0%25AF%2588thayir-vadaiVadai-Recipe-In-tamilvadai-in-tamil.jpg&hash=4c42a2e26b0c74199f5734a6feb5c4cefed7cd01)
உளுந்து வடை (பெரியது) – 4,
புளிக்காத தயிர் – 2 கப்,
உப்பு – தேவைக்கேற்ப.
அலங்கரிக்க…
ஓமப்பொடி அல்லது காராபூந்தி – 4 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
சீரக தூள் – 1/4 டீஸ்பூன்.
உளுந்து வடையை சூடு ஆறிய பின், அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து விட்டு, உப்பு சேர்த்து கலக்கிய கட்டியில்லா தயிரை வடையின் மேல் ஊற்றி சீரகம் மற்றும் மிளகாய் தூள் தூவி, ஓமப்பொடி / காராபூந்தி சேர்த்து, கொத்தமல்லித் தழை தூவி அலங்கரித்து பரிமாறவும்.