FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: இணையத்தமிழன் on July 22, 2016, 07:40:53 PM
-
எழுத்திலே புரட்சி செய்து,
இணையத்தில் காது கிழியும் வரை பேசி, கருத்துக்களில் மட்டுமே வீரம் காண்பிக்கும் போராளிகள் நாங்கள். எங்கள் வீரதீரத்தை எல்லாம் பேச்சோடு நிறுத்திக் கொண்டு, நத்தையென கூட்டுக்குள் முடங்கிக் கொள்ளும் சுயநலவாதிகள் நாங்கள்.
எந்த அடக்குமுறைக்கும் மறுப்பு சொல்ல இயலாது கோபங்களை உள்ளடக்கிக் கொண்டு பிடிக்காத விஷயங்களை ஜீரணிக்க மட்டுமே பழகிக் கொண்ட அப்பாவிகள் நாங்கள்...
எங்களின் பெயர்....
நவீன நடைமுறை தமிழர்கள்.
-
ஒரு அருமையான சிந்திக்கவைத்த பதிவு,... முன் கடந்து போவோரின் முகம் காண முடியவில்லை. பின் நின்று சிரிப்போரின் எண்ணம் எனக்கு புரியவில்லை. தலை தாழ்ந்தே எங்கும் பயணம். தொடுதிரையை தொட்டபடி உள்ளங்கையில் தான் உலகம். என் கைபேசி காதலியானாள்- நான் கட்டிய மனையாள் நெடுந்தூரம் போனாள்... உற்றாரும் உறவினரும் Family குரூப்பில், நண்பனும் அவனின் நண்பனும் நட்பெனும் குரூப்பில். சாம கோழி கூவிய பின்னும், கொக்கரக்கோ கேட்கும் முன்னும், இணையத்தில் மூழ்கலானேன்-நிஜமெனும் வசந்தத்தை நிழலாலே மறந்தும் போனேன். எவர் எவருக்கோ பிறந்த நாள் வாழ்த்து,.அடுத்தவர் இழப்பிற்கு துக்கச்சேதி. Hi என எவரோ அனுப்ப Hai என பதிலுரைத்தேன்-ஏனோ நான் பெற்ற பிள்ளை \\\"அப்பா\\\"என்றழைக்க, சற்றே புருவம் உயர்த்தி பார்வையாலே சுட்டெரித்தேன்... அடுத்தவரின், Status பார்த்து ரசித்தேன், profile பார்த்து வியந்தேன், Picture Msg பார்த்து லயித்தேன், video பதிவிறக்க ஆர்வத்தில். கை அலம்பியபின் யோசித்தேன். நான் என்ன சாப்பிட்டேன் என்பதை...அமிர்தம் தந்த மனையாளிடம் அடுத்தடுத்து சண்டையிட்டேன்... நானாய் சிரித்தேன், நானாய் அழுதேன், நானாய் வியந்தேன், நானாய் ரசித்தேன்-ஏனோ நான், நானாய் மட்டும் இல்லை... ஆண்ட்ராய்டில் அனைத்தும் உள்ளதென அங்கலாய்த்தேன். என் குடும்பம் விலகி போவதை கண்டும் கூட Network கிடைக்கும் இடம் தேடி அலையலானேன்... ஈமோஜியில் சிரிப்பு,அழுகை,சோகம்,வெட்கம், ஆடல்,பாடல்,குடும்பம்,நட்பு என அனைத்தும். ஆனால்... நான் நிமிர்ந்து பார்க்கும் போது என் முன்னே எவருமில்லை., சுற்றமும்,நட்பும் உள்ளங்கை உலகத்தோடு எனை கடந்து போயினர்... இந்த இணைய உலகம்-போதும் சொந்தமே., இனி என்னோடு நேரினில் புன்னகையிடுங்கள். நட்பே., வா தெருவோர டீக்கடை நமக்காய் தவம் தவம் கிடக்கிறது........