FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on July 22, 2016, 07:35:39 PM
-
வான் மழை வந்து மண்ணை தொட்டால் வருமே ஒரு வாசம்..
காட்டு மரங்கள் உரசும்போது காற்றினிலே ஒரு வாசம்..
பூவின் அரும்பு திறக்கையிலே திகழுமே ஒரு வாசம்..
புத்தரிசி குத்தும் வேளையிலே புறப்படுமே ஒரு வாசம்..
கரும்பு வெல்லம் காய்ச்சையிலே கமழ்ந்திடுமே ஒரு வாசம்..
இதை மறந்துவிட்டு செய்கின்றோம் நகரத்தில் இன்று வாசம்..
இது தான் நரக வாசம்!