FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Forum on July 20, 2016, 10:48:08 PM

Title: FTC ஐந்தாம் ஆண்டு நிறைவு கவிதை நிகழ்ச்சி
Post by: Forum on July 20, 2016, 10:48:08 PM
நண்பர்கள் கவனத்திற்கு ...

நம் அரட்டை மற்றும் பொது மன்றத்தின் ஐந்தாம்  ஆண்டு நிறைவை முன்னிட்டு ... இந்த கவிதை பகுதியில் நீங்கள் உங்கள் உங்களின் கற்பனை திறமைய வெளிப்படுத்தும்  பொருட்டு  கவிதை மழைகளை  பொழியலாம் ...
 கவிதை நம் நண்பர்கள் இணையத்தளம் சார்ந்ததாய் மட்டுமே அமையவேண்டும் .. எதிர்வரும் 26 ஆம்  தேதிக்கு  முன்பாக  உங்கள் கவிதைகளை பதிவு செய்யுமாறும்  கேட்டுக் கொள்கின்றோம் ..பதிவு செய்யப்பட்டகவிதைகள் ஐந்தாம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சியின்பொழுது நண்பர்கள் இணையதள வானொலி ஊடாக உங்களை வந்தடையும்.
 
Title: Re: FTC ஐந்தாம் ஆண்டு நிறைவு கவிதை நிகழ்ச்சி
Post by: !! DJ HussaiN !! on July 22, 2016, 01:03:30 AM
       FTC - என்றால் உங்களை பொறுத்தவரை
     friends tamil chat என்பீர்கள்  ஆனால்
     என்னை பொறுத்தவரை FTC என்பது
     family there caring என்று தான் கூறுவேன்
  ( குடும்பம் இருக்கிறது பார்த்துக்கொள்ள )

  ஒரு தாய் தான் குழந்தையை எப்படி பாதுகாப்பாக
  தான் கருவறையில் சுமக்கிறாளோ
  அதே போன்று தான் நீ என்னை சுமக்கிறாய்

  நான் சந்தோஷம் கொள்ளும் வேலையில்
  எனக்கு தோழியாக இருந்து நீயும் சந்தோஷம் கொள்கிறாய்

  நான் கவலை படும் பொழுது
  எனக்கு தோழனாக இருந்து ஆறுதல் சொல்கிறாய்

  நான் பயம் அறியும் பொழுது
  ஒரு நண்பனாக இருந்து
  எனக்கு நீ தெய்றியம் ஊட்டுகிறாய்

  நான் தவறான பாதையில் செல்லும் பொழுது
  ஒரு ஆசிரியரை போல் என்னை வழிநடத்தி செல்கிறாய்

  என்னை பொறுத்தவரை இது இணையதளம் அல்ல
  எதுவும் எனது குடும்பமே ...

  FTC உன்னை பற்றி  கூற இதற்கு மேல்
  எனக்கு வார்த்தை தெரியவில்லை

        இங்கு எனக்கு கிடைத்த சொந்தங்கள் அனைவருக்கும்
                                                   எனது நன்றி
 
 
                                                                                   
                                                                         என்றும் உங்கள்
                                                                  குடும்பத்தில் ஒருத்தன்
                                                                                Dj Husain
Title: Re: FTC ஐந்தாம் ஆண்டு நிறைவு கவிதை நிகழ்ச்சி
Post by: பவித்ரா on July 22, 2016, 02:16:15 AM
நான் கற்ற தமிழை மெருகேற்றி
நன்றாய் பேச வைத்தாய்
நல்ல நட்புக்களை கொடுத்து
நல்லது கெட்டது அறியவைத்தாய் ...!

என்னை கொஞ்சம் கொஞ்சமாய்
பொது மன்றம் அழைத்து சென்று
பதிவிட பழக்கி நிழற்படம்
கண்டு கவிதை எழுத வைத்தாய் ...!

பாடினாலே தலைதெறிக்க ஓடும்
உடன் பிறந்தவன் அசந்து போகும் படி
என்னை பாட வைத்து
பண்பலையில் படரவிட்டாய் ....!

எனக்கு பிடித்த நகைசுவை கலந்து
நிகழ்ச்சியை தொகுத்து வழங்க
வாய்ப்பு கொடுத்து தொகுப்பாளராக்கி
பேச்சு திறனை வெளிக்கொணர்ந்தாய் ....!

என்னை எனக்கே புரியவைத்தாய்
கவலைகள் என்னை சேராமல்
நட்பினை கொண்டு என்னை
தாங்கி பிடித்தாய் ....!

அகங்காரம் இல்லாத தலைமை
அதிகார துஷ்பிரயோகம் இல்லாத
பாதுகாக்கும் நட்புக்கள் வருபவர்கள் எல்லாம்
நண்பர்கள் என்ற எண்ணமே உன் வளர்ச்சி ....!

ஐந்தாண்டு நிறைவு என்ன
உனக்குள் இருக்கும் பன் முகங்களுக்கு
ஆண்டுகள் பல கடந்து  நண்பர்கள் இணைய தளம்
அழகாக ஜொலிக்கும் என்பதில் ஐய்யமில்லை  ....!
Title: Re: FTC ஐந்தாம் ஆண்டு நிறைவு கவிதை நிகழ்ச்சி
Post by: thamilan on July 22, 2016, 08:06:46 PM
FTCயின் ஐந்தாம் ஆண்டு நிறைவு நாள்
நான் பார்க்கப் பிறந்த FTC குழந்தைக்கு
ஆறாவது பிறந்தநாள் இன்று

பிறந்தநாள் தொட்டு
என் கரம் பற்றி என் கூட வழிநடந்த
FTC எனக்கு தாயுமானவள் 
நல்ல நண்பர்களை
நல்ல உடன்பிறவா சகோதர சகோதரிகளை
எனக்கு தந்தருளியவள்

FTCயை என்னவென்று சொல்வது
ஒரு அன்பான குடும்பம் என்று சொல்லவா
ஒரு பல்கலைக்கழகம் என்று சொல்லவா இல்லை
எனக்கு ஆசான் என்று சொல்லவா
எது சொன்னாலும் மிகையாகாது

முகம் தெரியாவிட்டாலும்
நல் அகம் காட்டும் நண்பர்கள்
அண்ணா என்று அன்பால்
அடக்கியாளும் தங்கைகள்
இன்சொல் பேசி இன்புறவைக்கும் நண்பிகள்
வஞ்சகம் இல்லாமல் வாய்விட்டு
சிரித்திட பேசிடும் விகடகவிகள்
FTC ஒரு குடும்பம் அல்லவா

கதைப்பதத்திற்கே கஷ்டப்படும் என்னை
கவிதை எழுத வைத்த.........
தூங்கி  கிடந்த எனது சிந்தனைகளை
தூசு தட்டி சிந்தனையாளனாக்கிய ......
சாப்பிட மட்டுமே தெரிந்த என்னை
சமையல்காரனாக்கிய ........
வாதம் பண்ணியே பழக்கப்பட்ட   என்னை
விவாதிக்காகவும் கற்றுத் தந்த......
கவைலைகளை நீக்கிட அருமருந்தாக
இன்னிசை நாதங்களை  அள்ளித்தந்த
FTC ஒரு பல்கலைக்கழகம் அல்லவா

ஒரு நண்பனால் உருவானது
இந்த FTC சாம்பிராஜ்யம்
நண்பர்கள் நாம் அனைவரும்
அதன் தூண்கள்

FTC ஒரு ஆலமரம்
அதன் ஆணிவேர் ஒரு நண்பன் 
அதன் விழுதுகள்
நண்பர்கள் நாங்கள்

அந்த சாம்பிராயம்
எங்கும் பரவ
அந்த ஆலமரத்தின் கிளைகள்
எங்கும் படர
நண்பர்கள் நாம் என்றும் துணையிருப்போம் 

FTC இன்னும் பல பிறந்தநாட்களைக் கொண்டாட
இன்னும் பட்பல ஆண்டுகள்
அழகோடு மிளிர வாழ்த்துகிறேன்
Title: Re: FTC ஐந்தாம் ஆண்டு நிறைவு கவிதை நிகழ்ச்சி
Post by: JEE on July 23, 2016, 10:31:30 PM
FTC ஐந்தாம் ஆண்டு நிறைவு கவிதை ...................

FTC ஐந்தாம் ஆண்டு  சிறப்பு எண்ணிலடங்கா............

பஞ்ச ரத்தினங்கள் போன்ற மிளிறும்
பதிவுகளை மனத்தில் பல பதித்தாய்.............   
                                                         
பஞ்ச தந்திரங்கள்  பலவற்றை வெல்லும்                                                     
பக்க வாத்தியங்கள் பல ஈந்தாய்...........

பஞ்ச வர்ணங்கள் கொண்ட ஓவியமீந்து                                                                                                                 
படுக்கையிலும் புலம்ப வைத்தாய்............

பஞ்ச பாண்டவர்கள்  வியந்திடும்       
பண்பாளர்கள் பலரை கொடுத்தாய்...........

பஞ்சபுராணம்  கண்டோர் வியக்க
பல சுயபுராணம் எமக்கருளினாய்.........

பஞ்சபட்ஷிகள் அனைத்தும் அறிந்த 
வல்லூறு இம்மாதம்  உயிராக்கினாய்,...............

பஞ்சலோகம் பஞ்சகாவ்யம் பஞ்சமாலை
பஞ்சசபைகள்   பஞ்ச ஆரண்யம்.....

பஞ்ச பஞ்ச பஞ்ச பஞ்ச  பஞ்சயென்று
பல பஞ்ச்  எழுதிட பஞ்ச் டயலாக் தருவாயா?

பல பஞ்ச் கொடுத்து எங்களை 
பரவசப்படுத்தினாய் ...........

பஞ்சமூர்த்திகள்....  பஞ்ச ஈஸ்வரர்கள் 
ஐவரை  வேண்டுகிறோம்........

பல்லாண்டு..... பல ஐந்தாண்டு.....
மணம் வீசச்செய்வாயென்று ..........

தொடர்ந்து வளம் காண....
வாழ்க வளமுடன்.......
Title: Re: FTC ஐந்தாம் ஆண்டு நிறைவு கவிதை நிகழ்ச்சி
Post by: PaRushNi on July 24, 2016, 02:29:25 AM
பயணம் !

நலமா ?சாப்பிட்டீங்களா ?
இந்த  இரு வார்த்தைகளை கொண்டு
பல நேரம் பக்கவாட்டில் இமைமூடாமல்
மறுமொழிக்கு காத்திருப்பேன்

இந்தக் குடும்பத்தில்..
ஒரு புது உறுப்பினருக்கு சிறு அடையாளமும் சாத்தியமோ ? 
ஆரம்பத்தில் எழுந்த கேள்வி இதுவே
சாத்தியமே என்னும் பதிலாய்..
பதிலுக்கு உதாரணமாய்..
இங்கே  ' ரசத்தில் போட்ட கருவேப்பிலை '

கண்ணாம்பூச்சி ஆட்டத்தில் சத்தத்தை கேட்டு
கைகளை நீட்டியவரே  தேடுகையில்  
எல்லையற்ற இன்பம் உண்டாகும்
அவ்வாறே செவிக்கும் கைவிரல்களுக்கும் 
மட்டற்ற மகிழ்ச்சியை கொடுத்தாயே !
இனிதாய் உமது பயணம் தொடரட்டும்

தாய் மொழிக்கு முக்கியத்துவம் கவிதை பாங்கினில்.,
கத்துக்குட்டிகளுக்கு  சிவப்பு கம்பள வரவேற்புடன்
மெய்சிலிர்க்கும் வாழ்த்துக்களுடன் 
பிறந்தநாள் கொண்டாட்டம் 
விழாக்கள் தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள்
நெறியாளர்களின் தன்னார்வ ஈடுபாடுடன்
இனிதாய் உமது பயணம் தொடரட்டும்!

உன்னில் பற்பல தனித்திறமைகள் வெளிப்படவும் 
கற்போரின் தேடலுக்கு வாய்ப்புகளின் ஊற்றாக 
மதிப்பீடு செய்யா, பாகுபாடு ,பிரிவினை வாரா
மதிப்புடன் பழகும் மாந்தர்கள் சபையுடன் 
இனிதாய் உமது பயணம் தொடரட்டும்

Fairy Tale கதாபாத்திரங்களுடன்  
ஒரு Reader ஆக FTC -யில் எனது பயணம் தொடரும்..
FTC Team  எடுக்கும் கோர்வையான அத்துணை
முயற்சிகளுக்கும்
வணக்கமும் வாழ்த்துக்களும்
Thank you FTC team
Dc all

Title: Re: FTC ஐந்தாம் ஆண்டு நிறைவு கவிதை நிகழ்ச்சி
Post by: ரித்திகா on July 24, 2016, 11:40:29 AM
எங்கோ பிறந்து
 எங்கோ வளர்ந்து
 எங்கோ படித்து
 ஒருவரை  ஒருவர் அறிமுகமின்றி இருந்தோம் ...!!!

 காரணமின்றி வந்த இடத்தில் ....
 பொக்கிஷமென கிடைத்த உறவுகள் ....
 உடன் பிறப்பு அல்ல ....
 உடன் பிறந்தாற்போல
 அக்கறை கொண்ட உறவுகள் ...
 பல ஆண்டு நட்பு அல்ல ....
 பல்லாயிரம் ஆண்டு  பழகியதுபோல்
 பழகிய நண்பர்கள் .....

திறமையற்றவளென
 எண்ணிருந்தேன் ....
 என்னுள் அடங்கிய
 சிறு சிறு  திறமைகளை
 வெளிக்கொணர்ந்தாய் ...
 என்னுள் திறமைகள்
 உண்டோ என வியப்படைய
 செய்தாய் ...

 புது புது உறவுகள் கை கூட ...
 புது புது சிந்தனைகள் ஒன்று சேர ...
 புது புது கருத்துகளை பகிர ...
 என்றும் உறுதுணையாக இருக்கும்
 இந்த தளம் ... FTC ஆகும் ....
 
 மதம் இனம் இடம்
 என்று பேதமின்றி
அனைவரையும் ஒற்றுமையாக
 இணைத்த தளம் ...
 தன் திறமைகள் என்னவென்று
 அறியா இருந்தவர்களுக்கு
 திறமைகளை வெளிப்படுத்த
 தூணாக அமைந்த தளம் ...
 நம் FTC ....

 ஐந்தாம் ஆண்டு நிறைவை
 காணும்  நமது  தளத்திற்கு
 எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் ...
 நன்றியையும் தெரிவிக்கிறேன் ...

~ !!! என்றும் நட்புடன் !!! ~
       ~ !!! உங்கள் தோழி !!! ~
                      ~ !!! ரிதிகா !!! ~
 !!!  வாழும்  அடுத்த
      நொடி நிச்சியமற்றது !!!
 !!!  வாழும்  வரை
      அனைவரிடமும் அன்பாகவும்
      மரியாதையாகவும்
      உண்மையாகவும் பழகுவோம் !!!

 
~ !!!BE HAPPY N KEEP SMILING ALWAYS... !!! ~

 
Title: Re: FTC ஐந்தாம் ஆண்டு நிறைவு கவிதை நிகழ்ச்சி
Post by: ! Viper ! on July 24, 2016, 01:30:26 PM
உடன் இருந்தும் உபயோகம்
இல்லாமல் இருக்கும் நண்பர்கள்
உறவினர்களின் பிடியிலிருந்து தப்பி
ஊர்,பேர்,முகம் தெரியாதவர்களிடம்
ஆறுதல் தேடி வருபவர்களுக்கு
அடைக்கலம் தந்தது இந்த அரட்டையரங்கம்..

ஆண் பெண் என்பதை கடந்து
நட்பு என்னும் பாச வலையில்
ஒருவரை ஒருவர் பேசி அறிந்து, புரிந்து
தனிமையில் இருந்து விடுபட்டு
பேச தெரியாதவனை கூட
மனம் விட்டு பேச வைத்தது இந்த  அரட்டையரங்கம்..

வருபவர்கள் மனம் கோணாமல்
அனுசரித்து பேசும் நண்பர்கள்
உறவாடும் அண்ணன்,அக்கா,தம்பி,தங்கை
இவை அனைத்தும் நமக்கு கிடைக்குமா
என்று ஏங்கி வருபவர்களுக்கு
சிவப்பு கம்பளம் விரிதி காத்திருக்கும் இந்த  அரட்டையரங்கம்..

இங்கு அன்பை காணலாம்,புன்னகையை காணலாம்...
அறிவை காணலாம்,வேகத்தைக் காணலாம்...
விவேகத்தை காணலாம்,பொறுமையைக் காணலாம்...
திறமையை காணலாம்,விடாமுயற்சியைக் காணலாம்...
இவை அனைத்தையும் தவிர
ஒருவர் மற்றவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை காணலாம்..

நண்பர்கள் ஒரு புறம் இருக்க
எப்பொழுதும் மனதிற்கு இதமாய்
எதிர்பார்ப்புகளைச் செவ்வனே புரிந்து
அனைவரும் ரசிக்கும் படி
இசை மழையில் நனைய வைக்கும்
FTC Fm எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்

தோள் கொடுக்க நண்பனும்
கை கொடுக்கும் உறவுகளும்
கொடுத்து என்னை இன்ப
வெள்ளத்தில் ஆழ்த்திய  FTC யே
நீர் வாழ்க.. மென்மேலும் வளர்க..
அனைவருக்கும் சந்தோசம் தருக !!
Title: Re: FTC ஐந்தாம் ஆண்டு நிறைவு கவிதை நிகழ்ச்சி
Post by: MyNa on July 24, 2016, 01:43:11 PM
எதிர்பாராத விதமாய் என் வாழ்வில்
எனக்கென ஒரு தோழனைக்  கொடுத்த
FTCக்கு என் மனமார்ந்த நன்றி

விட்டு போன நெடுந்தூர
உறவுகளைக் கட்டி அணைத்த
FTCக்கு என் மனமார்ந்த நன்றி

சிரித்தால் சேர்ந்து சிரிக்கவும்
அழுதால் அரவணைக்கவும்  உடன் இருக்கும்
FTCக்கு என் மனமார்ந்த நன்றி

எண்ணி பார்த்திடா வகையில்  எனக்கு
சில அறிய நண்பர்களைப் பரிசளித்த
FTCக்கு என் மனமார்ந்த நன்றி

என்னுள் உறங்கி கிடைத்த
என் தமிழ் தாயைத் தட்டி எழுப்பிய
FTCக்கு என் மனமார்ந்த நன்றி

கவிதைகளும் கேளிக்கைகளும்
தாங்கி மலரும் பொதுமன்றத்தை அளித்த
FTCக்கு என் மனமார்ந்த நன்றி

களைத்துப் போகையில் நம்மை
உற்சாகப்படுத்தும் பண்பலைக் கொடுத்த
FTCக்கு என் மனமார்ந்த நன்றி

ஒவ்வொரு குழந்தையின் பிறந்த நாளையும்
விமர்சையாக கொண்டாடும் FTCக்கு
என் மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பெயர் கொடுத்து அடை மொழியும் கொடுத்து
நண்பர்கள் பலர் கொடுத்து அளவற்ற  இன்பமும் கொடுத்து
என் வாழ்வில் வெளிச்சம் கொடுத்த FTCயே
நீ வாழ்க பல்லாண்டு... தொடரட்டும் உன் சேவை .. :)
Title: Re: FTC ஐந்தாம் ஆண்டு நிறைவு கவிதை நிகழ்ச்சி
Post by: SweeTie on July 24, 2016, 04:46:39 PM
வாழ்த்து மடல்

வாழிய வாழியவே!
வையகம் தன்னில் நண்பர்கள்  சூழவும் 
கண்டங்கள் அனைத்திலும்
உன் புகழ்  பாடவும்
தேன் மதுரத் தமிழோசை கேட்கவும்
தென்னகக் குயில்கள் கானமிசைக்கவும்
வாழிய வாழியவே !!

பற் பல விஷயம்  நுட்பமாய் படிக்க
பொதுமன்றம் அமைத்தாய்
காதுக்கினிய  கானம் கேட்க
இசைமன்றம் தந்தாய்
சரளமாய் பழகி சம்பாஷிக்க
அரட் டை அரங்கு
ftc  பெருமை நிரந்தரம்  வாழியவே!! .

ஐந்து வருடங்கள் பூர்த்தியை இன்று
நிறைவும் பொலிவும் சிறந்து ஓங்கிட’
நண்பர்கள்  அயலவர் அனைவரும்  சூழ
கொண்டாடும் ftc  வாழியவே! 
இறையருள் பெற்று  மாண்புடன்  இனிதாய்
என்றென்றும் வாழிய வாழியவே!!!

 
Title: Re: FTC ஐந்தாம் ஆண்டு நிறைவு கவிதை நிகழ்ச்சி
Post by: BreeZe on July 25, 2016, 08:41:11 AM


நண்பர்கள் அரட்டை அரங்கமே

நீ ஒரு கவிதை - அதில்
சுட்டிப் பிள்ளை
எனும் வரிகள் நான்

நீ ஒரு கடல் - அதில்
படகோட்டி நான்

நீ ஒரு வானம் - அதில்
நட்சத்திரம் நான்

நீ ஒரு சங்கீதம் - அதன்
சுவரங்கள் நான்

நீ ஒரு நதி - அதில்
நீந்தி விளையாடும்
வர்ண மீன் நான்

நீ ஒரு நந்தவனம் - அதில்
பூத்துக் குலுங்கும்
ரோஜா நான்

நீ ஒரு இதயம் - அதன்
துடிப்பு நான்

நீ ஒரு குடும்பம் - அதில்
எல்லோருக்கும் தங்கை நான்

நீ ஒரு ஆலமரம் - அதன்
நிழலில் இளைப்பாறும்
வழிப்போக்கன் நான்

நீ இன்றி நான் இல்லை
நான் இன்றி நீ இல்லை

இன்னும் பல நூற்றாண்றுகள்
நீ மென்மேலும் வளர
இன்னும் மெருகோடு
இணையதளங்களின் இளவரசியாய்
பவனி வர வாழ்த்தும்


பதிப்புரிமை
BreeZe

Title: Re: FTC ஐந்தாம் ஆண்டு நிறைவு கவிதை நிகழ்ச்சி
Post by: JerrY on July 25, 2016, 03:09:43 PM
தமிழ்த்தாயின் தத்தெடுப்பாய்
தவழ்ந்து வரும் தமிழே  .. FTC  ..

கவிதைகள் பல எழுத இங்கு கவிகள் பல
பேசி விளையாட இங்கு உறவுகள் பல
காதுக்கு இனிமை சேர்க்க பாடல் தொகுப்பு
நம் திறமைக்கு பலம் சேர்க்கும் ஓவியம் சிறப்பு  ..

மொத்த தமிழகமும் இங்கு எங்களின் விரல்நுனியில்
கடல் கடந்தும் கூட கொஞ்சும் தமிழ் எங்கள் காதின் முனையில்
முகம் தெரிய உறவுகளோடு
உரையாடல் மூலம் உறவை இணைத்தது ftc ..

தோழனும் , தோழியும் தந்த தகவல்  தொழில்நுட்பமே
பாசமும் , கற்பித்தலும் தந்த கணினியின் கன்னி தமிழே
அகவை ஐந்தில் உன் கால்தடம்
என் கைரேகை ஊடே உனக்கு இந்த கவிதை சமர்ப்பணம் ..

ftc தளத்தில் உழைக்கும் அனைத்து சகாக்களுக்கு  ..

இவன் ..

இரா.ஜெகதீஷ் ..
Title: Re: FTC ஐந்தாம் ஆண்டு நிறைவு கவிதை நிகழ்ச்சி
Post by: ராம் on July 25, 2016, 08:39:13 PM
நண்பர்கள் இணையத்தளம் தொண்டங்கி இரண்டாம் ஆண்டை 
கடக்கும் தருவாயில் உன் வாசலில் அடி எடுத்து வைத்தேன்
அடடா என்ன ஒரு வரவேற்பு மெய் சிலிர்க்க வைத்தது
நான் வந்தது உறவினர் வீடா அல்ல அரட்டை அரங்கமா 
என்ற குழப்பத்தோடு இந்த குடும்பத்தில் ஒருவனானேன் 
என்னற்ற சகோதர சகோதரிகளையும் நண்பர்களையும்
இணையதளமாகிய உன் வாயிலாக பெற்றுக்கொண்டேன்


அரட்டைக்கு மட்டுமே இந்த அரங்கம் என்று நினைத்தேன்
அடடே பொதுமன்றம் கூட வரேவேர்த்து காத்திருக்கிறது   
நமக்கே தெரியாமல் நம்முள் உறங்கி கிடக்கும்
திறமைகளை வெளிப்படுத்த ஒரு அற்புதமான இடம்
நண்பர்களால் அறிமுகமானேன் பொதுமன்றத்திலும்
சிறிது சிறிதாய் கிறுக்கலை தொடங்கினேன் ரசித்தார்கள்
இன்னும் சிறப்பான படைப்புகளை படைக்க
என்னோடு துணை நின்றார்கள்


பொதுமன்றம் தந்தையை போல அறிவு கண்ணை திறந்தது
பண்பலை இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்து
ஒரு தாயை போல தாலாட்டி துன்பங்களை மறக்க செய்யும்
இங்கே நண்பர்கள் மனதார பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் கூறுவதும்
விசேஷ தினங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளின் அணிவகுப்புமாய்
என்றும் தொடர வேண்டும் உன் அளவில்லா சேவை..


இங்கு வந்தோரை அன்புடன் வரவேற்று உபசரித்து 
எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களின்
நட்பெனும் கூட்டில் தக்க வைத்துகொள்ளும் நண்பர்கள் 
ஆறாம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் நண்பர்கள் இணையதளமே
உன் புகழ் இவ்வுலகம் முழுவதும் பரவட்டும்..
இன்னும் பல்லாண்டுகள் உன்னை தேடிவரும்
நண்பர்கள் உன் பெருமைகளை கூறி
உனது அடுத்த கட்ட வெற்றிக்கு துணை புரிவாராக …


                                                                                        Kirukkaludan Priyamaana Imsai Thozhan RaM