FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 20, 2016, 08:51:43 PM
-
வீட்டுக்குறிப்புக்கள், ….டிப்ஸ்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FyZIsIfd.jpg&hash=236cbfc6aa3a15e16e7af58bd2a1e3db5d7c9099)
* திராட்சைக்குப் பதிலாக, பேரீச்சம் பழத்தை தூளாக நறுக்கி நெய்யில் வறுத்து போட்டால் சுவையாக இருக்கும்.
* கைகளில் உப்பை தடவிக்கொண்டு வாழைக்காய், வாழைப்பூ போன்றவற்றை நறுக்கினால், பிசுபிசுவென ஒட்டாது.
* நான்ஸ்டிக் பாத்திரத்தில் கேசரி, பால்கோவா போன்ற இனிப்பு வகைகளைச் சமைத்தால் அடிபிடிக்காது.
* இட்லி பொடி தயாரிக்கும்போது ஒரு தேக்கரண்டி தனியாவை வறுத்து மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்தால் இட்லி பொடி மணமாக இருக்கும்.
* மிளகாய் வறுக்கும்போது சிறிது உப்பை சேர்த்து வறுத்தால் நெடியிலிருந்து தப்பிக்கலாம்.
* குழம்பிலோ, ரசத்திலோ உப்பு அதிகம் ஆனால் இரண்டு கரண்டி சாதத்தை அதில் போட்டால் உப்பின் அளவு சரியாகி விடும்.
* மீதமாகும் தேங்காய் துருவலுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கி வைத்தால் கெடாமல் இருக்கும்.