FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 18, 2016, 11:54:35 PM

Title: ~ ஜவ்வரிசி வடை ~
Post by: MysteRy on July 18, 2016, 11:54:35 PM
ஜவ்வரிசி வடை

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2Fjuk-1-e1468817262978.jpg&hash=62a3da4b03dc22263d3527e928389bf19841daa3)

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி – 1 கப்
உருளைக்கிழங்கு – 2
வேர்க்கடலை – 1/4 கப்
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
மல்லித் தளை – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எலுமிச்சைசாறு – 2 டீஸ்பூன்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை:

முதலில் ஜவ்வரிசியை நீரில் 3-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதற்குள் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியில் உள்ள நீரை முற்றிலும் வடித்துவிட்டு போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு அதில் உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து, அத்துடன் பச்சை மிளகாய், வெங்காயம், பொடி செய்து வைத்துள்ள வேர்க்கடலை, கொத்தமல்லி, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, பிசைந்து கொள்ள வேண்டும். பின் அதனை உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளாக பிடித்து வைத்துள்ளதை, வடை போன்று தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ஜவ்வரிசி வடை ரெடி!!!