FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 17, 2016, 10:41:52 PM

Title: ~ யாழ்ப்பாணத்து மீன் குழம்பு ~
Post by: MysteRy on July 17, 2016, 10:41:52 PM
யாழ்ப்பாணத்து மீன் குழம்பு

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F12%2Fimg_0152-e1449247393925.jpg&hash=5c1813bf20867b3c908c6a7178599018c5d99000)

மீன் குழம்புக்குத் தேவையான பொருட்கள்

வெட்டிக் கழுவிய மீன் துண்டுகள் – 500 கிராம்
உரித்து, கழுவி, வெட்டிய சிறிய வெங்காயம் – 100 கிராம்
கழுவி, வெட்டிய பச்சை மிளகாய் – 4
யாழ்ப்பாணத்துத் தூள் – காரத்துக்குத் தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
பழப்புளிக் கரைசல் – 1 கப்
தேங்காய்ப்பால் – முதற்பால் 1 கப் – 2 ம் 3ம் பால் ஒவ்வொரு கப்

மீன் குழம்பு செய்யும் முறை

ஒரு மண் சட்டியில் கழுவிய மீன் துண்டுகள், வெட்டிய சிறிய வெங்காயம் , பச்சை மிளகாய் போன்றவற்றைப் போடவும். சிலர் கருவேப்பிலையும் போடுவார்கள்.
பழப்புளிக் கரைசல், தேங்காய்ப் பால், தேவையான அளவு உப்பு, யாழ்ப்பாணத்து மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
சேர்த்த கலவையை நன்றாகக் கலக்கவும். மண் சட்டியை அடுப்பில் மிதமான சூட்டில் வைக்கவும். அதிகம் நெருப்பும் தேவைப்படுவதில்லை.
குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் பிறந்து வரும்போது நற்சீரகம், மிளகு, உள்ளி ஆகியவற்றை இடித்துப் போடுவார்கள். இதனால் குழம்பு நன்றாக மணக்கும்.
பொதுவாக இவ்வாறே மீன் குழம்பு வைத்தாலும், இடத்துக்கு இடம் சில சில வேறுபாடுகளைக் காணமுடியும்.
மதிய நேரத்திற்கு பிரதான கறியாக மீன் குழம்பு பயன்படுத்தப்படுவதுடன், இரவு தயாரிக்கப்படும் புட்டுக்கும் பொருத்தமான கறியாக மீன் குழம்பு இருக்கும்.
முன்னரெல்லாம் அடுத்த நாள் காலையில் பழஞ்சோற்றுடனும் உண்ணப்படும் கறியாக மீன் குழம்பு பயன்படுத்தப்படும்.
மீன் கறி, மீன் குழம்பு போன்ற உணவுகளுக்கு ஒடியல் புட்டு மிகப் பொருத்தமானதாக இருக்கும்