FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on July 16, 2016, 07:53:30 PM

Title: எதிர்பார்ப்பு
Post by: thamilan on July 16, 2016, 07:53:30 PM
"என்னை யாரும்
புரிந்துகொள்ளவில்லை
என்னை யாரும்
நேசிக்கவில்லை 
என்னை யாரும்......."

போதும் நிறுத்து
உன்னை போலவே தான்
எல்லோரும்
பிச்சைக்காரனிடம் பிச்சையெடுக்கும்
அறியாமையின்  மனம்கொண்டு

உன் எதிர்பார்ப்பை நிறுத்தி
அடுத்தவனுக்கு
பாசத்தையும் அன்பையும்
அளவில்லாமல் அள்ளிக்கொடு
அடுத்தவனை புரிந்துகொள்

எதெல்லாம் உனது எதிர்பார்ப்போ
அதை எல்லாம் அடுத்தவரிடம் 
கண்டு மகிழ்

இந்த மகிழ்ச்சி வந்ததும்
நீ அறியப்படுவாய்
உன்னைப் புரிந்து
கொள்ளும்
இந்த மானுடம்
Title: Re: எதிர்பார்ப்பு
Post by: ரித்திகா on July 22, 2016, 03:33:35 PM
உண்மையான வரிகள் தோழரே ...!!!
 
   எதிர்பார்ப்பதை விட ....
      எதிர்பார்ப்பவர்களுக்கு  அன்பு காட்டினால்...
         நாம் எதிர்ப்பார்த்ததை விட அன்புமும்
           மகிழ்ச்சியும் நம்மை என்றும் சூழ்ந்திருக்கும் ....
  நம் எதிர்பார்ப்பை நிறுத்தி ....
       மற்றவர்களிடம் அன்பு செலுத்துவோம் !!!!


~ வாழ்த்துக்கள் ~

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl.glitter-graphics.com%2Fpub%2F2644%2F2644828ibvxh6oa74.gif&hash=9e4609be3df460029d0ccd71ca096e284cb7cca8)